For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சிஎஸ்கே தான் எல்லாத்துக்கும் காரணம்”.. ஆசிய கோப்பையை வென்றது எப்படி.. இலங்கை கேப்டன் நெகிழ்ச்சி!

துபாய்: சிஎஸ்கேவின் மந்திரம் தான் ஆசிய கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தது என இலங்கை அணி கேப்டன் கூறியுள்ளார்.

Recommended Video

Asia Cup 2022 Final வெற்றி குறித்து Dasun Shanaka கருத்து

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடந்தின.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி வெற்றி கண்டது.

ஆசிய கோப்பை 6வது முறையாக இலங்கை வென்றது.. பாகிஸ்தான் படு தோல்வி.. ஸ்ரீலங்காவின் புதிய அத்தியாயம்ஆசிய கோப்பை 6வது முறையாக இலங்கை வென்றது.. பாகிஸ்தான் படு தோல்வி.. ஸ்ரீலங்காவின் புதிய அத்தியாயம்

அட்டகாச பேட்டிங்

அட்டகாச பேட்டிங்

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓபனிங் வீரர்கள் குஷல் மெண்டிஸ் 0 (1), நிஷங்கா 8 (11) ஆகியோர் வெகுசீக்கிரம் வெளியாகி ஏமாற்றினர். இதன்பின்னர் வந்த வீரர்களும் சொதப்ப, இலங்கை அணி 58/5 எனத் திணறியது. எனினும் மிடில் ஆர்டரில் அடுத்து ராஜபக்சா 71 (45) - ஹசரங்கா 36 (21) அதிரடி பார்ட்னர்ஷிப் அமைக்க, இலங்கை அணி 20 ஓவர்களில் 170/6 ரன்களை எடுத்தது.

பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் தோல்வி

கடின இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இந்த முறையும் கேப்டன் பாபர் அசாம் (5) சொதப்பினார். அந்த அணியில் முகமது ரிஸ்வான் 55 (49), இப்திகார் அகமது 32 (31) இருவர் மட்டுமே சிறப்பாக விளையாட மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அமீரகத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணி தான் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நேற்று இலங்கை அணி வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது,. இந்நிலையில் இதற்கு சிஎஸ்கே தான் காரணம் என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.

சிஎஸ்கே தந்த ஊக்கம்

சிஎஸ்கே தந்த ஊக்கம்

இதுகுறித்து பேசிய அவர், அமீரகத்தில் டாஸை இழந்தவுடன் போட்டியை இழந்தது போன்ற மனநிலை வந்துவிடும். ஆனால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே முதலில் பேட்டிங் தான் செய்தனர். ஆனால் அவர் சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். அவர்களின் வெற்றி, எங்களுக்கும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தது.

குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

போட்டி முழுவதும் எங்களுக்கு பார்வையாளர்கள் பெரும் அளவில் ஆதரவு தந்தார்கள். அணியில் ஹசரங்கா, ராஜபக்சா, கருணரத்னே ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து அனியை மீட்டுக்கொண்டு வந்தனர். 160+ ரன்களை இலக்காக வைத்திருந்தால் அது குறைவு தான். மனரீதியில் 170 என்பது பெரிய ஸ்கோராகத்தான் தெரியும். ஆனால் இங்கு விரட்டக்கூடிய ஒன்று தான். எனினும் 100 சதவீத உழைப்பை கொடுத்து வென்றுள்ளோம் எனத் தெரிவித்தார்.

Story first published: Monday, September 12, 2022, 19:13 [IST]
Other articles published on Sep 12, 2022
English summary
Pakistan vs srilanka Asia cup 2022 final ( ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ) ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கு சிஎஸ்கே தான் காரணம் என இலங்கை கேப்டன் ஷனகா கூறியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X