For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாஸ் காட்டும் இலங்கை.. பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது.. ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது.

பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி, தற்போது ஆசிய கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு அணிகளும் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாக நடந்தது.

அசலாங்காவுக்கு பதில் தனஞ்செய்யா டி சில்வா மற்றும் பெர்னான்டோவுக்கு பதில் பிரமோத் மதுசான் ஆகியோர் இலங்கை அணியிலும், நஷிம் ஷா, ஷதாப் கான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கி காதிர் மற்றும் ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டனர்.

ஒரு கோடி கொடுத்தாலும் தர மாட்டேன்..விராட் கோலியின் வெறித்தனமான பாக். ரசிகர்..கோலியின் இன்ப அதிர்ச்சி ஒரு கோடி கொடுத்தாலும் தர மாட்டேன்..விராட் கோலியின் வெறித்தனமான பாக். ரசிகர்..கோலியின் இன்ப அதிர்ச்சி

பாபர் அசாம் 30

பாபர் அசாம் 30

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரிஸ்வான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, பாபர் அசாம் 29 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து ஃபக்கர் ஷமான், இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 13 ரன்களை சேர்த்தனர்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

பாகிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி கொண்டிருந்த நிலையில், அதன் பிறகு இலங்கை வீரர்களின் சூழலில் சிக்கி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனஞ்செய்யா டி சில்வாவில் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தனர். இதே போன்று சிஎஸ்கே வீரர் தீக்சனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

பாகிஸ்தான் அணி மேலும் 30 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்த 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 121 ரன்களுக்கு சுருண்டது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மெண்டிஸ், குணதிலாகா ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர். தனஞ்செய்யா டி சில்வா 9 ரன்களில் வெளியேற, ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் நிசாங்கா பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார்.

இலங்கை அபாரம்

இலங்கை அபாரம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்சா 24 ரன்களிலும், ஷனாகா 21 ரன்களிலும் வெளியேறினர். நிசாங்கா கடைசி வரை அபாரமாக விளையாடி 48 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 17வது ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தற்போது அந்த அணி வீரர்கள் நல்ல உத்வேகத்துடனும், சாதிக்க வேண்டிய வெறியுடனும் விளையாடுவதால், அந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, September 9, 2022, 23:32 [IST]
Other articles published on Sep 9, 2022
English summary
Asia cup 2022 – Srilanka remains unbeaten in super 4 round கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X