For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம ஆஸ்திரேலியாவா இது?.. 6வது இடத்திற்குத் தள்ளப்பட்ட பரிதாபம்!

கார்டிப்: ஐந்து முறை உலக கோப்பை வென்ற அணியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது பரிதாப நிலைக்குப் போய் விட்டது. ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அடைந்த தோல்வி ஆஸ்திரேலிய அணியை பின் தள்ள வைத்து விட்டது. ஒரு நாள் தரவரிசையில் 6 ஆவது இடத்திற்கு அது போயுள்ளது. கடந்த 34 வருடங்களில் ஆஸ்திரேலியா அணி கண்ட மிகப்பெரிய தரவரிசை பின்னடைவு இதுவேயாகும் என்பது குறிப்படத்தக்கது. இதற்கு முன் 1984 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி தரவரிசையில் ஆறாம் இடம் பெற்றிருந்தது.

Aussies go to 6th place in ICC ranking

கடைசியாக ஆஸ்திரேலிய அணி விளையாடிய 15 போட்டிகளில் 13 போட்டிகளில் தோல்விகளை தழுவியது. இதில் இந்தியா, நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கெதிராக தொடரையும் இழந்தது.

Aussies go to 6th place in ICC ranking


தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை பெற்றது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் வென்றால் மட்டுமே போட்டித்தொடரின் முடிவில் ஒருநாள் தரவரிசையில் 5ஆவது இடத்தை பிடிக்க முடியும்.

2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறவிருக்கும் நிலையில், இது ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னைடைவாகவே பார்க்கப்படுகிறது.


Story first published: Tuesday, June 19, 2018, 14:18 [IST]
Other articles published on Jun 19, 2018
English summary
Australia has been pushed to 6th place in ICC's ODI ranking list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X