For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா அடி.. 18வது ஓவரிலேயே முடிந்த ஆட்டம்.. ருத்ரதாண்டவம் ஆடிய ஆஸி. வீராங்கனைகள்.. சோகத்தில் இந்தியா

மும்பை: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது.

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகளிர் அணிக்காக டி20 உலகக்கோப்பைத் தொடர் நடக்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சந்தித்துள்ளது. இதன் முதல் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது.

“3 வருஷத்துல என்னதான் செய்தீர்கள்”.. இந்திய அணியின் தொடர் தோல்விகள்.. முன்னாள் வீரர் சரமாரி கேள்வி! “3 வருஷத்துல என்னதான் செய்தீர்கள்”.. இந்திய அணியின் தொடர் தோல்விகள்.. முன்னாள் வீரர் சரமாரி கேள்வி!

ஷஃபாலி வர்மா சொதப்பல்

ஷஃபாலி வர்மா சொதப்பல்

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹேலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக தொடங்கிய ஷஃபாலி வர்மா 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஜெமீமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது.

இறுதியில் அதிரடி காட்டிய இந்தியா

இறுதியில் அதிரடி காட்டிய இந்தியா

தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா 28 ரன்களிலும், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 36 ரன்களையும், தீப்தி ஷர்மா 16 பந்துகளில் 36 ரன்கள் விளாசி அசத்தினர். இதன்மூல்ம இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

 ஆஸ்திரேலியா ஆதிக்கம்

ஆஸ்திரேலியா ஆதிக்கம்

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. கேப்டன் அலிஷா ஹேலி - பெத் மூனி இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. பின்னர் கேப்டன் அலிஷா ஹேலி 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

பின்னர் வந்த தஹிலா மெக்ராத் - மூனி இணை, கடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை மீண்டும் இந்திய அணிக்கு நினைவூட்டினர். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை எளிதாக பவுண்டரியாக விளாசியதோடு, அவ்வப்போது சிக்சர்களையும் பறக்கவிட்டனர். இறுதியாக 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 16வது போட்டிகளை வென்று ஆஸி. சாதனை படைத்துள்ளது.

Story first published: Saturday, December 10, 2022, 0:08 [IST]
Other articles published on Dec 10, 2022
English summary
Australia won the first T20 against India by 9 wickets. Also 16th consecutive win for Australia Women in T20 Matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X