For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உடலில் அவ்வளவு அடி.. ஆஸ்திரேலியரை போலவே விளையாடினார்.. புஜாராவுக்கு அயல்நாட்டில் இருந்து வந்த புகழ்!

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் சட்டீஸ்வர் புஜாராவின் ஆட்டம் குறித்த பேச்சு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

Recommended Video

Pujara உடலில் அவ்வளவு அடி.. அயல்நாட்டில் இருந்து வந்த புகழ் | Oneindia Tamil

கடந்த 2020, டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் அந்த தொடரில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

ஷாருக்கானின் அந்த மனசு.. கொரோனா பாதித்த நிமிடங்கள்.. முதல் முறையாக வாய்த்திறந்த வருண் சக்கரவர்த்தி! ஷாருக்கானின் அந்த மனசு.. கொரோனா பாதித்த நிமிடங்கள்.. முதல் முறையாக வாய்த்திறந்த வருண் சக்கரவர்த்தி!

1989க்கு பிறகு ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் அந்த அணியை முதல் முறையாக வென்ற அணியாக பெருமை பெற்றது இந்திய அணி. அந்த டெஸ்ட் தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் வென்றது.

4வது டெஸ்ட்

4வது டெஸ்ட்

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 1- 1 என சமமாக இருந்தது. 3வது போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றாக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் 3வது டெஸ்டில் சமார்த்தியமான ஆட்டத்தால் சமன் செய்தது இந்திய அணி. இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஆட்டமாக காபா டெஸ்ட் போட்டி அமைந்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்திய அணிக்கு 327 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியில் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட்-ன் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு புறம் ரிஷப் பண்ட் (89), சுப்மன் கில் (91) ஆகியோர் அதிரடி காட்டிய நிலையில் புஜாரா மறுபுறம் தடுப்பாட்டம் ஆடி பக்கபலமாய் இருந்தார். 2வது இன்னிங்ஸில் 211 பந்துகளை சந்தித்த அவர், 56 ரன்களை எடுத்தார். உடலில் பல அடிகள் விழுந்த போதும், அவர் எதிலும் தடுமாறாமல் தடுப்பாட்டம் மேற்கொண்டார். இதனால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 -1 என்ற கணக்கில் வென்றது.

மார்கஸ் புகழாரம்

மார்கஸ் புகழாரம்

இந்நிலையில் அதுகுறித்து இங்கிலாந்து வீரர் மார்கஸ் ஹாரிஸ் பேசியுள்ளார். அதில், காபா டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் அற்புதமாக இருந்தது. கடைசி வரை அவர்கள் ரன் அடிப்பார்களா? இல்லையா? என்ற பதற்றம் நிலவியது. ரிஷப் பண்ட் அன்றைய தினம் மிகச்சிறப்பாக ஆடிய போது புஜாரா தனது தோளில் கடைமையை சுமர்ந்திருந்தார். அவர் உடலில் அவ்வளவு அடியை வாங்கிய போதும், சக வீரர்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

ஆஸ்திரேலியர்

ஆஸ்திரேலியர்

புஜாராவின் தடுப்பாட்டாத்தை பார்க்கும் போது, ஆஸ்திரேலியர் விளையாடியது போல இருந்தது. அனைத்து பந்துகளையும் தனது நெஞ்சில் வாங்கிக்கொண்டு தடுப்பாட்டம் செய்தார். மற்ற அனைவரும் அவரின் பார்ட்னர்ஷிப் உதவியுடம் சிறப்பாக ஆடினர். குறிப்பாக ரிஷப் பண்ட்-ன் ஆட்டம் வியக்க விதித்தது எனக்கூறினார்.

Story first published: Saturday, May 29, 2021, 21:43 [IST]
Other articles published on May 29, 2021
English summary
Australia Cricketer Marcus Harris says Pujara batted like an Australian in the Gabba Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X