For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2022ஆம் ஆண்டு தொடக்கமே இப்படி நடக்கனுமா? சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் சோகம்..

சிட்னி: புத்தாண்டு எப்போதும் நன்மையையும், நல்லது தரும் என்பது தான் அனைவரின் எதிர்பார்பாக இருக்கும்.

நமக்கு மட்டும் அல்ல, நமக்கு பிடித்தவர்களுக்கும், நமக்கு பிடித்த விஷயங்களுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்ற ஆசையை நமக்கு இருக்கும்.

ஆனால் எல்லாம் கோட்டையும் அழி, மீண்டும் முதலில் இருந்து வரேன் என்று சொன்னால் யாருக்கு தான் அதிர்ச்சியாக இருக்காது.

ஆஸ்திரேலிய அணியில் சென்னை வீரர்.. யாருக்கும் இல்லாத அரிய திறமை..கொண்டாடித் தள்ளும் சிஎஸ்கே ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணியில் சென்னை வீரர்.. யாருக்கும் இல்லாத அரிய திறமை..கொண்டாடித் தள்ளும் சிஎஸ்கே ரசிகர்கள்

புத்தாண்டு டெஸ்ட்

புத்தாண்டு டெஸ்ட்

சரி விசயத்துக்கு வருவோம். பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை 3க்கு0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்டாலும், 4வது டெஸ்ட், வரும் 5ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.

மீண்டும் கொரோனா

மீண்டும் கொரோனா

ஆனால், 2020ஆம் ஆண்டு போலவே தற்போதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு கொரோனாவால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆம், ஆஷஸ் தொடர் நடைபெறுமா என்ற சிக்கல் எழுந்துள்ளது. காரணம், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளையும் விட்டு வைக்கவில்லை

டிராவிஸ் ஹேட்

டிராவிஸ் ஹேட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் குடும்பத்தினர் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களின் ஒருவரான டிராவிஸ் ஹேட்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

போட்டி ரத்து?

போட்டி ரத்து?

டிராவிஸ் ஹேட்டுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்றும், அவர் நலமுடன் மெல்போர்னில் தங்கியுள்ளதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது, மற்ற வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. தற்போது வரை போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேலை மேலும் சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் போட்டி ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IND vs SA | Victory at Centurion testament to India's all-round performance in Tests -Kohli
மிட்செல் மார்ஷ்க்கு வாய்ப்பு

மிட்செல் மார்ஷ்க்கு வாய்ப்பு

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், நிக் மெடின்சன், ஜோஸ் இன்ங்லிஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பை தொடரின் ஹீரோக்களில் ஒருவரான மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆஸ்திரேலிய அணிக்கு பலமாக கருதப்படுகிறது. ஆனால், ஒரே கேள்வி போட்டி நடைபெறுமா?

Story first published: Friday, December 31, 2021, 10:01 [IST]
Other articles published on Dec 31, 2021
English summary
Australia cricketer travis head suffering from corona ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களின் ஒருவரான டிராவிஸ் ஹேட்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X