For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரபரப்பு கட்டத்தில் ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா வெற்றிக்கு 170 ரன்கள் இலக்கு

By Veera Kumar

பிரிஸ்பேன்: ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும், பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.

Australia need 170 to win first Test

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்து 7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஜோ ரூட் (51), மொயின் அலி (40), பேரிஸ்டோவ் (42) ஆகியோர் மட்டும் ஓரளவுக்கு ரன் எடுத்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 170 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டார்க், ஹசில்வுட், லியான் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்- 302, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்- 328 ரன்கள். இரு அணி பந்து வீச்சும் சம பலத்தோடு உள்ளதால் ஆஷஸ் டெஸ்ட் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

Story first published: Sunday, November 26, 2017, 10:48 [IST]
Other articles published on Nov 26, 2017
English summary
Australia's need 170 runs to win the opening Magellan Ashes Test after the bowlers skittled England for 195 on a controversial fourth day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X