For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாவ் இது என்ன வித்தியாசமா இருக்கு.. புதிய கிரிக்கெட் பயிற்சியை அறிமுகப்படுத்திய ஆஸ்திரேலியா!

கிரிக்கெட் உலகிற்கு ஆஸ்திரேலிய அணி புதிய கிரிக்கெட் பயிற்சி முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

By Shyamsundar

Recommended Video

வீரர்களுக்கு கேட்ச் பிடிக்க புதுவகை பயிற்சியளிக்கும் ஆஸ்திரேலியா- வீடியோ

மெல்போர்ன்: கிரிக்கெட் உலகிற்கு ஆஸ்திரேலிய அணி புதிய கிரிக்கெட் பயிற்சி முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எப்படி பந்தை பார்க்காமல் கேட்ச் பிடிப்பது என்று இதன் மூலம் கற்றுக் கொள்ள முடியும்.

ரிக்கி பாண்டிங் அணியில் இணைந்த சமயத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணியில் இப்படி வித்தியாசமான புதிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ரிக்கி பாண்டிங்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஜெர்சியை அறிமுகப்படுத்தினார். ஷு முதற்கொண்டு அவர் மாற்றினார். தற்போது புதிய கேட்ச் டெக்னீக் அந்த அணிக்கு கிடைத்துள்ளது.

பயிற்சி

இந்த பயிற்சி ஒரு திரைக்கு பின் பக்கம் இருந்து கொண்டு கொடுக்கப்படும். திரைக்கு இந்த பக்கம் இருக்கும் பயிற்சியாளர் அந்த பக்கம் இருக்கும் வீரருக்கு கீழ் வழியாக வேகமாக பந்தை வீசுவார். அந்த பந்தை வீரர் சரியாக பிடிக்க வேண்டும்.

பலன்

பலன்

இதன் மூலம் வீரர்களின் எதிர்வினையாற்றும் வேகம் அதிகம் ஆகும். அதேபோல் பந்தை பார்க்காமல் எளிதாக யூகித்து விக்கெட் எடுக்க முடியும். இதனால் கேட்சுகளை யாரும் விடமாட்டார்கள் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது முறை

அதேபோல் மறைப்பு இல்லாமல் எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். இது இன்னும் எளிதாக பயன் அளிக்கும்.

சூப்பர்

இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். இவர் இதை பேட்டிங் பிடிக்கவும் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

Story first published: Tuesday, February 20, 2018, 17:21 [IST]
Other articles published on Feb 20, 2018
English summary
Australia's new catch practice blows away internet. The innovative idea of the coach became viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X