“இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்”.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் எடுத்த முடிவு.. ஜாம்பவான் எச்சரிக்கை!

மும்பை: ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் கேப்டன்சி செயல்பாடுகளுக்கு நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் இயான் செப்பல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஆஷஸ் தொடர் வரும் டிசம்பர் 8ம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் போதுதான், ஆஸ்திரேலிய அணியில் பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்தது.

பாலியல் குற்றச்சாட்டுகள்

பாலியல் குற்றச்சாட்டுகள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த டிம் பெயின் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்ற நிலைபாட்டில் கிரிக்கெட் வாரியம் இருந்தாலும், சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் டிம் பெயின் தாமாக முன்வந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தற்காலிகமாக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் விலகி இருப்பதாகவும் அறிவித்துவிட்டார்.

புது கேப்டன்கள் நியமனம்

புது கேப்டன்கள் நியமனம்

இதனால் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸை நியமித்தினர். துணைக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றபோது, பந்தை சேதப்படுத்திய புகாரில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு டிம் பெய்னிடம் அந்த பதவி ஒப்படைக்கப்பட்டது. அதற்காக தண்டனைகளை அனுபவித்த ஸ்மித் மற்றும் வார்னர் சமீப காலமாக தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோன்றி வருகின்றனர்.

 முன்னாள் வீரர் கண்டனம்

முன்னாள் வீரர் கண்டனம்

இந்நிலையில் மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு துணைக் கேப்டன் பதவி கொடுத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் செப்பல், கேப்டன் பதவிக்கு பேட் கம்மின்ஸ் சிறந்த தேர்வு. நல்ல அனுபவம் அவரிடம் உள்ளது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதவி வழங்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது சர்ச்சையை ஏற்படுத்தும் முடிவு.

Ashes 2021-22: Alex Carey to debut, Replaces Tim Paine! Aussies Confirms Squad | OneIndia Tamil
தவறு தவறு தான்

தவறு தவறு தான்

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தவறுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்தவர்கள். எத்தனை நாட்கள் ஆனாலும், தவறு எப்போதும் தவறு தான். அவருக்கு துணைக் கேப்டன் பதவி கொடுத்திருப்பது தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும். வேறு முடிவை எடுத்திருக்கலாம் என இயான் செப்பல் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Australia Skipper Ian Chappell feels that Smith being named vice-captain is a "controversial choice”
Story first published: Monday, December 6, 2021, 14:13 [IST]
Other articles published on Dec 6, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X