For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் நினைக்காத முடிவு.. ஆஷஸ் தொடரில் அந்த வீரரை கழற்றிவிடுகிறது ஆஸி..! பொங்கும் ரசிகர்கள்

எட்ஜ்பாஸ்டன்: ஆஷஸ் தொடரில், ஸ்டார்க்கை கழற்றிவிட ஆஸ்திரேலியா திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 1ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் 2019 முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதற்கான அணியை இங்கிலாந்து அறிவித்துவிட்டது. ஆனால், ஆஸ்திரேலியா அது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரும் உலக கோப்பையின் சிறந்த பவுலருமான மிட்செல் ஸ்டார்க் இருக்க மாட்டார் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஹேசில் வுட்டுக்கு பதில் பீட்டர் சிடில் களம் இறங்குவார் என்றும் தெரிகிறது.

ஸ்டார்க் கிடையாது

ஸ்டார்க் கிடையாது

தற்போது அபாரமாக வீசி வரும் ஜேம்ஸ் பேட்டின்சன் அணியில் இடம்பெறுவார். அவரை போன்று, பேட்டின்சன், கமின்ஸ், சிடில், லயன் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் ஸ்டார் பவுலர் மிட்செல் ஸ்டார்க் நிச்சயம் கழற்றிவிடப்படுவார் என்று தகவ்லகள் வெளியாகி ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளன.

ரசிகர்கள் ஆவேசம்

ரசிகர்கள் ஆவேசம்

ஆஸ்திரேலியா அணிக்காக அவரின் பங்களிப்பு அதிகம் என்றும், ஆஷஸ் தொடரில் எடுக்க வில்லை என்று அது அநியாயம் செய்வது போன்றதாகும் என்றும் ரசிகர்கள் பொங்கி உள்ளனர். அவரின் கடின உழைப்பை மனதில் கொண்டு அணியில் எடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர்.

பவுலிங் கூட்டணி

பவுலிங் கூட்டணி

கடந்த ஆஷஸ் தொடரில் ஸ்டார்க் 22 விக்கெட்டுகளை அள்ளினார். இதே தொடரில் கமின்ஸ் 24 விக்கெட்டுகள், ஹேசில்வுட் 21 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆனால் இந்த மூவர் கூட்டணியில் தற்போது ஒருவருக்கு மட்டுமே இடம் என்று தெரிவித்திருக்கிறார் கோச் ஜஸ்டின் லாங்கர். சிடில் இங்கிலாந்து பிட்ச்களில் கூடுதல் பொருத்தமுடைய வீச்சாளர் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.

2001ம் ஆண்டு ஆஷஸ்

2001ம் ஆண்டு ஆஷஸ்

ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளை ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொண்டதா என தெரியவில்லை. இது குறித்து, ஆலன் பார்டர் கூறுகையில், 2001 முதல் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் விளையாடும் போது ஆஸ்திரேலியாவின் பாணி எடுபட வில்லை.

வேறு வகை ஆட்டம்

வேறு வகை ஆட்டம்

எனவே இம்முறை முற்றிலும் வேறு வகையான ஒரு கிரிக்கெட் ஆட்ட முறையை கடைபிடிக்க உள்ளோம். ஸ்டார்க் வேகமாக வந்து வீசி சில விக்கெட்டுகளை வீழ்த்தலாம். ஆனால் அது சரியாக அமையவில்லை எனில் அவர் ரன்களை கொடுக்கும் பவுலராகவே கருதப்படுவார் என்றார்.

Story first published: Wednesday, July 31, 2019, 22:43 [IST]
Other articles published on Jul 31, 2019
English summary
Australia star bowler starc may misses ashes series sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X