For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அளவை மீறக் கூடாது!! ஓவராக ட்வீட் போட்ட தொகுப்பாளினிக்கு எச்சரிக்கை விடுத்த பாக். வீரர்

அபுதாபி: பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் பாபர் ஆசாம் தன் முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.

அதற்கு பலரும் வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டனர். அதில் ஒரு பதிவு பாபரை கோபமூட்டும் வகையில் அமைந்தது.

சைனாப் அப்பாஸ் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் தொகுப்பாளினி போட்ட ட்வீட் தான் பாபருக்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது.

"ஐயோ.. நெருப்பு, நெருப்பு.. காப்பாத்துங்க".. பதற வைத்த கார் பந்தய விபத்து

எட்டாக்கனியான சதம்

எட்டாக்கனியான சதம்

பாபர் ஆசாம் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவரை 92 மற்றும் 62 ரன்கள் அடித்தார். ஆனால், தன் முதல் டெஸ்ட் சதம் மட்டும் எட்டாக்கனியாக இருந்தது.

முதல் சதம் அடித்த பாபர்

முதல் சதம் அடித்த பாபர்

இந்த நிலையில், தன் முதல் டெஸ்ட் சதத்தை நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடித்தார். 127 ரன்கள் அடித்த பாபருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. அதில் சைனாப் அப்பாஸ் போட்ட வாழ்த்து செய்தி கொஞ்சம் ஓவராக இருந்தது.

மிக்கி ஆர்தர் மகனின் சதம்

சைனாப் அப்பாஸ் போட்ட பதிவில், "நன்றாக ஆடினீர்கள் பாபர் ஆசாம். மிக்கி ஆர்தர் தன் "மகனின்" சதத்துக்கு கொண்டாடிய போது மற்ற வீரர்கள் வாழ்த்தியதை ரசித்தேன்" என கூறி இருந்தார்.

மிக்கி ஆர்தர் கொண்டாட்டம் ஏன்?

மிக்கி ஆர்தர் கொண்டாட்டம் ஏன்?

இந்த பதிவு கொஞ்சம் அளவு கடந்ததாகவே இருந்தது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பாபர் ஆசாம் போன்ற இளம் வீரர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். அதே போல அவர்களும் போட்டிக்கு போட்டி சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். பாபர் ஆசாம் தன் முதல் சதத்தை அடித்ததை ஒரு பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். அதை "மகனின் சதத்துக்கு கொண்டாடினார்" என சைனாப் கூறியுள்ளார்.

பாபர் அறிவுரை

இதற்கு பதில் அளித்துள்ள பாபர் ஆசாம், "ஏதாவது சொல்லுமுன் யோசியுங்கள். உங்கள் அளவை மீறக் கூடாது" என அறிவுரை (எச்சரிக்கை!?) கூறியுள்ளார். சைனாப் அப்பாஸ் முன்பு ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர் ராகுலை பாராட்டி ட்வீட் போட்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பிரபலமானார்.

Story first published: Monday, November 26, 2018, 19:02 [IST]
Other articles published on Nov 26, 2018
English summary
Babar Asam is not happy with this congrats tweet from Zainab Abbas
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X