For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டீமில் 13 வீரர்கள்.. பாஷ் பூஸ்ட்.. பவர் சரஜ்.. என்னங்க இது? ஆஸி. கிரிக்கெட்டில் நடந்த கேலிக்கூத்து!

மெல்போர்ன் : இந்தியாவின் ஐபிஎல் தொடருக்கு இணையாக ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் எனும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்த டி20 தொடரில் அவ்வப்போது புதிய விஷயங்களை அறிமுகம் செய்கிறோம் என்ற பெயரில் கிரிக்கெட்டை தாண்டிய சில விஷயங்கள் உள்ளே புகுத்தப்பட்டு வருகிறது.

2020 பிக் பாஷ் லீக் தொடரில் புதுமைகள் என்ற பெயரில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதை ரசிகர்கள் எதிர்த்தும், கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

பிக் பாஷ் லீக்

பிக் பாஷ் லீக்

பிக் பாஷ் லீக் டி20 தொடர் தான் ஐபிஎல்-லுக்கு அடுத்து மிகப் பெரும் டி20 லீக் தொடர். அந்த தொடரை உலகம் முழுவதும் கண்டு களித்து வருகிறார்கள். ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இருக்கிறார்கள் அதன் நிர்வாகிகள்.

விற்பனை யுக்தி

விற்பனை யுக்தி

அதனால் சுவாரசியமான, பரபரப்பான கிரிக்கெட் மோதல் என்பதைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கும் கிரிக்கெட் போட்டி என்ற பார்வையில் இந்த லீக் தொடரை அணுகி வருகிறது அந்த தொடரின் நிர்வாகம். கடந்த ஆண்டு டாஸ் போட காசு வேண்டாம், பேட்டில் டாஸ் போடலாம் என்ற புதிய முறையை அமலுக்கு கொண்டு வந்து வேடிக்கை காட்டினார்கள்.

அலிஸ்டர் டாப்சன்

அலிஸ்டர் டாப்சன்

பிக் பாஷ் லீக் தொடரின் தற்போதைய தலைவராக இருப்பவர் அலிஸ்டர் டாப்சன். இவர் மார்க்கெட்டிங் துறையை சார்ந்தவர். இவரை தலைவராக நியமித்ததே அந்த தொடரை பெரிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் என்கிறார்கள்.

மூன்று விதிகள்

மூன்று விதிகள்

அவர் தலைமையிலான பிக் பாஷ் லீக் நிர்வாகம் தற்போது மூன்று விதிகளை அமல்படுத்தி உள்ளனர். பவர்பிளே ஓவர்களை மாற்றி அமைக்கும் பவர் சர்ஜ், 13 வீரர்களை கொண்ட அணியில் மாற்று வீரர்கள் போட்டிகளுக்கு இடையே பங்கேற்க வாய்ப்பளிக்கும் எக்ஸ் ஃபேக்டர், 10 ஓவர்களில் எதிரணியை விட கூடுதல் ரன்கள் எடுத்தால் போனஸ் புள்ளி அளிக்கும் பாஷ் பூஸ்ட் ஆகியவையே அந்த விதிகள்.

பவர் சர்ஜ்

பவர் சர்ஜ்

தற்போது டி20 போட்டிகளில் முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளே ஆகும். அதை மாற்றி அமைத்து முதல் நான்கு ஓவர்கள் பவர்பிளேவாகவும், கூடுதல் இரண்டு ஓவர்கள் பவர்பிளேவை 10 ஓவர்களுக்கு பின் எப்போது வேண்டுமானாலும் பேட்டிங் செய்யும் அணி எடுத்துக் கொள்வதே பவர் சர்ஜ்.

எக்ஸ் ஃபேக்டர்

எக்ஸ் ஃபேக்டர்

ஒவ்வொரு அணியும் டாஸ் நிகழ்வின் போது 13 வீரர்கள் கொண்ட அணியை அளிக்க வேண்டும். அந்த கூடுதல் இரு வீரர்கள் பேட்டிங் செய்யாத ஒரு வீரருக்கு மாற்றாக 10வது ஓவருக்கு பின் பேட்டிங் செய்ய இறங்கலாம் அல்லது ஒரு ஓவருக்கு அதிகமாக பந்து வீசாத ஒரு பந்துவீச்சாளருக்கு மாற்றாக பந்து வீச களத்துக்கு வரலாம்.

பாஷ் பூஸ்ட்

பாஷ் பூஸ்ட்

இனி வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளுக்கு பதிலாக 3 புள்ளிகள் அளிக்கப்படும். முதல் 10 ஓவர்களில் எதிரணி எடுத்த ஸ்கோரை சேஸிங் செய்யும் அணி 10 ஓவர்களில் முந்தினால் ஒரு போனஸ் புள்ளி கிடைக்கும். அதை செய்யத் தவறினால் முதலில் பேட்டிங் செய்த அணிக்கு போனஸ் புள்ளி கிடைக்கும்.

இதெல்லாம் சரியா வருமா?

இதெல்லாம் சரியா வருமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்த புதிய விதிகள் மூலம் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் முன்னேற்றம் அடையும் என கூறி உள்ளது. ஆனால், ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை நாசமாக்கும் முயற்சியே இதெல்லாம் என கூறி வருகின்றனர்.

காணாமல் போகும் கிரிக்கெட்

காணாமல் போகும் கிரிக்கெட்

இந்த மூன்று விதிகளில் பவர் சர்ஜ் என்பது முன்பு ஒருநாள் போட்டிகளில் ஐசிசியால் அறிமுகம் செய்த விதி தான். பின்னர் அந்த விதி மாற்றப்பட்டு கட்டாய பவர்பிளே மட்டுமே தற்போது உள்ளது. அதைத் தவிர 10 ஓவர்களில் எடுத்த ஸ்கோரை முந்துவது, மாற்று வீரரை ஆட வைப்பது போன்றவை உண்மையான கிரிக்கெட்டை அழிக்கும் என சிலர் கூறி உள்ளனர்.

தெரு கிரிக்கெட் விதிகள்

தெரு கிரிக்கெட் விதிகள்

சிலர் அடுத்ததாக பிக் பாஷ் லீக் தொடரில் தெரு கிரிக்கெட்டில் அமலில் இருக்கும் ஒரு பிட்ச் கேட்ச், முதல் பந்தில் அவுட் ஆனாலும் அவுட் இல்லை என்பது போன்ற விதிகளை அமல்படுத்துவார்கள் என கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Monday, November 16, 2020, 15:23 [IST]
Other articles published on Nov 16, 2020
English summary
BBL 2020 : Big Bash League introduced Power Surge, Bash Boost, X factor in BBL 2020 season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X