சிரிப்பால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட விராட்

BCCI Annual awards 2018 - 2019| இணையத்தில் வைரலான கோலியின் சிரிப்பு

மும்பை : மும்பையில் நேற்று மாலை நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விராட் கோலி, தன்னுடைய மயக்கும் சிரிப்பால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

இந்திய கிரிக்கெட் டீமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட கோலியின் புகைப்படம் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியது.

இந்த நிகழ்ச்சியில் ஜஸ்பிரீத் பும்ரா சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை பெற்றார். பூனம் யாதவ் கிரிக்கெட் வீராங்கனைக்கான பாலி உம்ரிகர் விருதை பெற்றார்.

மும்பையில் பிரமாண்ட விழா

மும்பையில் பிரமாண்ட விழா

பிசிசிஐ சார்பில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 2006-07 முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று மாலை நடைபெற்றது.

பூனம் யாதவிற்கு விருது

பூனம் யாதவிற்கு விருது

இந்த நிகழ்ச்சியில் ஜஸ்பிரீத் பும்ராவிற்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது. இதேபோல கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவிற்கு விருது வழங்கப்பட்டது.

கோப்பை... பரிசுப்பணம்...

கோப்பை... பரிசுப்பணம்...

பாலி உம்ரிகர் விருது பெற்ற பும்ரா மற்றும் பூனம் யாதவிற்கு கோப்பை மற்றும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

அஞ்சும் சோப்ராவிற்கு விருது

அஞ்சும் சோப்ராவிற்கு விருது

இதனிடையே முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதேபோல பெண்கள் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ராவிற்கு பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

திரும்பிப் பார்க்க வைத்த கோலி

திரும்பிப் பார்க்க வைத்த கோலி

நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்டன் விராட் கோலி அனைவரையும் கவரும்வகையில் இருந்தார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அருகில் அமர்ந்திருந்த அவர், புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்வகையில் அழகான சிரிப்பை வெளிப்படுத்தினார்.

சிரிப்பே போதுமானதாக இருந்தது

சிரிப்பே போதுமானதாக இருந்தது

மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைவரையும் கவர்வது எப்படி என்பதை நன்றாக தெரிந்து வைத்துள்ளவர் கோலி. அவரின் இந்த சிரிப்பு மிகவும் பிரகாசமாக இருந்தது. அவருக்கு அருகில் லைட்டுகளே தேவைப்படவில்லை.

View this post on Instagram

Shine like the Skip! 🌟🌟 Hey There 👋🏻👋🏻 #NAMAN

A post shared by Team India (@indiancricketteam) on

லைக்குகளை அள்ளிய சிரிப்பு

விராட் கோலியின் இந்த சிரிப்புடன் கூடிய புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் டீம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த புகைப்படம் அள்ளியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
BCCI Annual awards night - Fans likes Virat's smile
Story first published: Monday, January 13, 2020, 12:45 [IST]
Other articles published on Jan 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X