ஐபிஎல் தொடருக்கு சாவுமணி.. 15வது சீசன் தோல்வி.. கோடிகளை இழக்கும் பிசிசிஐ.. அதிர்ச்சியில் ஜெய்ஷா

மும்பை: நடந்து முடிந்த ஐபிஎல் 15வது சீசன் படுதோல்வியை தழுவியதாக புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் புதியதாக 2 அணிகள், புதிய வீரர்கள், மெகா ஏலம் என போட்டிகளை பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

7 மாதங்களில் 4 முறை.. கே.எல்.ராகுல் மீது கடுப்பில் உள்ள பிசிசிஐ.. அப்படி என்னதான் பிரச்சினை!! 7 மாதங்களில் 4 முறை.. கே.எல்.ராகுல் மீது கடுப்பில் உள்ள பிசிசிஐ.. அப்படி என்னதான் பிரச்சினை!!

மெகா ஏலம் காரணமாக சென்னை, மும்பை போன்ற அணிகள் பலவீனமாக மாறியது. இதனால், இரு அணிகளும் நடப்பு சீசனில் படுதோல்வியை தழுவியது.

தடுமாறும் ஐபிஎல்

தடுமாறும் ஐபிஎல்

இரண்டு அணிகளும் முறையே 9வது மற்றும் 10வது இடத்தை பிடித்தது. இதே போன்று புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் அணிகள் பிளே ஆப் வரை சென்றது. ஆனால் இந்த அணிகள் விளையாடிய போட்டிகளை ரசிகர்கள் பார்க்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதி வாரத்திற்கான தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட் வெளியாகியுள்ளது.

டிஆர்.பி சரிவு

டிஆர்.பி சரிவு

இதில் கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை காட்டிலும், 15வது சீசன் இறுதிப் போட்டி 20 முதல் 22 சதவீதம் வரை பார்வையாளர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது. கடந்த சீசன் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே, கொல்கத்தா அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரின் டிஆர்பி கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை குறைந்துள்ளது.

Recommended Video

IPL-ல் 94 Matches! BCCI-யின் Big Plan! Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil
விளம்பரத்திற்கு சிக்கல்

விளம்பரத்திற்கு சிக்கல்

ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கடந்த ஆண்டு பெற்றதால், இம்முறை அதனை ஒளிபரப்பிய ஸ்டார் நிறுவனம் விளம்பரத்திற்கான தொகையை 20 சதவீதம் வரை உயர்த்தியது, இதன் காரணமாக 4000 கோடி வரை வருமானத்தை ஸ்டார் நிறுவனம் பெற்றது. ஆனால், கொடுத்த காசுக்கு ஏற்ப டிஆர்பி வரவில்லை என்பதால், இனி விளம்பரத்திற்கு அவ்வளவு தொகையை எந்த நிறுவனங்களும் வழங்காது.

ஜெய்ஷா அதிர்ச்சி

ஜெய்ஷா அதிர்ச்சி

இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்புக்கான உரிமம் ஏலம் தற்போது தொடங்கியுள்ளது. இதன் மூலம் பிசிசிஐ 50 ஆயிரம் கோடி ரூபாய் மேல் வரும் என எதிர்பார்த்தது. ஆனால், நடந்து முடிந்த சீசனின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால், மீண்டும் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் முன் வராது. இதனால் அகல காலை வைத்து ஜெய்ஷா சிக்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI faces huge loss after IPL season 15 TV Ratings dip ஐபிஎல் தொடருக்கு சாவுமணி.. 15வது சீசன் தோல்வி.. கோடிகளை இழக்கும் பிசிசிஐ.. அதிர்ச்சியில் ஜெய்ஷா
Story first published: Saturday, June 11, 2022, 16:47 [IST]
Other articles published on Jun 11, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X