For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியுடன் ரிஷப் பண்டை ஒப்பிடுவதா? பிசிசிஐ தலைவர் கங்குலி காட்டம்.. கோலி, ரோகித்துக்கு ஓய்வு ஏன் ?

கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆப் சுற்று இன்று முதல் தொடங்கும் நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, விராட் கோலி, ரோகித் சர்மா குறித்தும், ஐபிஎல் தொடர் குறித்தும், தென்னாப்பிரிக்கா தொடர் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

ரோகித் சர்மா கடந்த 14 போட்டியில் 268 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதனால் அவர் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ ஐபிஎல் பிளே ஆஃப்பில் சாதனைகள்.. அதிக ரன்கள், அதிக வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விவரம் இதோ

ரோகித்துக்கு ஆதரவு

ரோகித்துக்கு ஆதரவு

இதற்கு பதில் அளித்த கங்குலி, ரோகித் ஃபார்ம் என்பது கவலை அளிக்கும் விஷயமல்ல. மனிதர்கள் என்றால் தவறு செய்வார்கள். கேப்டனாக ரோகித்தின் சாதனைகள் அட்டகாசமானவை. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கிறார். ஆசிய கோப்பையை வென்று இருக்கிறார். எப்போதெல்லாம் கேப்டனாக இருந்திருக்கிறாரோ, அப்போதெல்லாம் அவர் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்.

ஓய்வு ஏன்?

ஓய்வு ஏன்?

விராட் கோலியும் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆர்சிபி அணிக்கு முக்கியமான நேரத்தில் கைகொடுத்தார். சில நேரம் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது மூலம், அவர்களது பேட்டிங் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்கள் எல்லாம் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள் என நம்புகிறேன். இதனால் தான் விராட் கோலி, ரோகித், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.

தோனி Vs ரிஷப் பண்ட்

தோனி Vs ரிஷப் பண்ட்

ரிஷப் பண்டை தோனியுடன் ஒப்பிடாதீர்கள் தோனி ஐபிஎல், டெஸ்ட், ஒருநாள் என 500க்கும் மேற்பட்ட போட்டியில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். தோனி மிகவும் அனுபவம் மிக்கவர். அவரை போல் முன் அனுபவம் இல்லாத ரிஷப் பண்டுடன் ஒப்பீடு செய்வது நியாயம் அல்ல. ரிஷப் பண்ட் தன்னை வளர்த்து கொள்ள இன்னும் நேரம் உள்ளது.

இளம் வீரர்களுக்கு பாராட்டு

இளம் வீரர்களுக்கு பாராட்டு

ஐபிஎல் தொடரில் ராகுல் திரிபாதி, ஆர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ராகுல் திவாட்டியோ ஆகியோர் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட ஐபிஎல் ஒரு நல்ல மேடையாக அமைந்துள்ளது. உம்ரான் மாலிக் காயம் இல்லாமல், இதே போன்று வேகமாக வீசினால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

Story first published: Tuesday, May 24, 2022, 17:46 [IST]
Other articles published on May 24, 2022
English summary
BCCI President Ganguly says don’t compare Rishabh with Dhoni தோனியுடன் ரிஷப் பண்டை ஒப்பிடுவதா? பிசிசிஐ தலைவர் கங்குலி காட்டம்.. கோலி, ரோகித்துக்கு ஓய்வு ஏன் ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X