உங்களோட சாதனைகள் அதிகமாக வெளியில தெரியாமலே போயிடுது... அஸ்வின் குறித்து கங்குலி வருத்தம்

டெல்லி : கடந்த 10 ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டியுள்ளதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச அளவில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சர்வதேச டெஸ்ட் அணியிலும் விராட் கோலியை அடுத்து அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி, அஸ்வின் தன்னுடைய மேலான திறமையை வெளிப்படுத்தி வருவதாகவும் ஆனால் அதிக நேரங்களில் அவருடைய திறமை வெளியில் தெரியாமலேயே போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியீடு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியீடு

சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒரு அணியை உருவாக்கியுள்ளது. டெஸ்ட் அணியில் விராட் கோலியும் ஒருநாள் சர்வதேச போட்டியில் தோனியும் இதற்கு கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலில் சேர்ந்த பௌலர்

பட்டியலில் சேர்ந்த பௌலர்

சர்வதேச அளவில் சிறந்த வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டெஸ்ட் போட்டிக்கான அணியில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து பௌலராக இந்த அணியில் இணைந்துள்ள ஒரே வீரர் அஸ்வின் மட்டுமே.

பௌலர் அஸ்வின் சாதனை

பௌலர் அஸ்வின் சாதனை

தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2011ல் தன்னுடைய முதல் போட்டியை துவங்கி, தொடர்ந்து தன்னுடைய பௌலிங் திறமையை நிரூபித்து வருகிறார்.

சர்வதேச அணியில் இடம்பிடித்த அஸ்வின்

சர்வதேச அணியில் இடம்பிடித்த அஸ்வின்

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ள சர்வதேச டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, தோனி, ரோகித் ஷர்மாவிற்கு பிறகு அணியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

"சாதனை வெளியில் தெரிவதில்லை"

இந்நிலையில், அஸ்வினின் இந்த சாதனைக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வினின் பல்வேறு சாதனைகள் வெளியில் தெரியாமல் போவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

முதலிடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின்

முதலிடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின்

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் அஸ்வினை விட 29 விக்கெட்டுகள் குறைவாக பெற்று இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Ravichandran Ashwin hailed by Saurav Ganguly for his most international wickets this decade
Story first published: Wednesday, December 25, 2019, 11:11 [IST]
Other articles published on Dec 25, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X