பிரிஸ்பேன் ஹோட்டல்ல அடிப்படை வசதி எதுவும் இல்லையாம்... வீரர்கள் குற்றச்சாட்டு... பிசிசிஐ தலையீடு

பிரிஸ்பேன் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

பிரிஸ்பேனில் ஒரு ஹோட்டலில் இந்திய வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஹவுஸ்கீப்பிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சந்தேகம்தான்.. வலியில் துடிக்கும் அஸ்வின்.. நடராஜனை கொண்டு வர ரஹானே திட்டம்.. 4 பேர் பார்முலா!

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் முறையிட்டுள்ளது. மேலும் வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.

பிரிஸ்பேனில் துவக்கம்

பிரிஸ்பேனில் துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4வது மற்றும் இறுதிப் போட்டி பிரிஸ்பேனில் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ளது. இதையடுத்து பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

நடவடிக்கை எடுக்க பிசிசிஐ உறுதி

நடவடிக்கை எடுக்க பிசிசிஐ உறுதி

அந்த ஹோட்டலில் ரூம் சர்விஸ், ஹவுஸ் கீப்பிங் வசதிகள் இல்லையென்றும், சர்வதேச தரத்தில் இல்லாமல் சாதாரண ஜிம் மட்டுமே உள்ளதாகவும், ஸ்விமிங் பூல் கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் இந்திய வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விரைவில் வீரர்களுக்கு தேவையான வசதிகள் செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

15ம் தேதி போட்டி

15ம் தேதி போட்டி

இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் கவனம் செலுத்தி வருவதாகவம் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் கொரோனா பரவலையடுத்து கடுமையான குவாரன்டைன் விதிமுறைகளுடன் வரும் 15ம் தேதி இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுடன் விளையாடவுள்ளனர்.

பிசிசிஐ தகவல்

பிசிசிஐ தகவல்

வீரர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், ஹோட்டலுக்குள்ளேயே வீரர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக் கொள்வதற்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Players have been provided with a team room and are allowed to meet each other inside the hotel -BCCI sources
Story first published: Wednesday, January 13, 2021, 13:11 [IST]
Other articles published on Jan 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X