For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா நம்பி இருக்கும் ஐந்து பிளேயர்கள்.. கிரிக்கெட்டில் கெத்து காட்டும் தமிழன்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் பிளேயர்கள் மிகவும் திறமையாக் விளையாடி வருகின்றனர்.

By Shyamsundar

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் பிளேயர்கள் மிகவும் திறமையாக் விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் உருவாக்கத்தில் இருந்தே கிரிக்கெட் உலகில் தமிழக பிளேயர்கள் கலக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின் என மூன்று முக்கிய பிளேயர்களும், விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் என்ற புதிய பிளேயர்களும்தான் இனி இந்திய அணியில் கலக்க இருக்கிறார்கள்.

தற்போது அஸ்வினும், முரளி விஜயும் மிக முக்கியமான பல சாதனைகளை படைக்கும் வேகத்தில் விளையாடி வருகின்றனர். அடுத்த ஐபிஎல் போட்டி இன்னும் நிறைய தமிழ்நாடு பிளேயர்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் இருக்கும் கொஞ்சம் பழைய தமிழ் வீரர் என்றால் அது கண்டிப்பாக தினேஷ் கார்த்திக்காகத்தான் இருப்பார். 2002ல் முதன் முறையாக தன்னுடைய முதல்தர போட்டிகளில் அறிமுகம் ஆனார். அப்போது விக்கெட் கீப்பிங்கில் மிக அதிகமாக சொதப்பினார். அதன்பின் இந்திய அணியில் 2004 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார். அதற்குள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி திறமையான விக்கெட் கீப்பராக மாறினார். இப்போது கீப்பிங்கில் டோணிக்கு மாற்றாக இருப்பவர்கள் என்ற பட்டியலில் இவர்தான் முதல் இடத்தில் உள்ளார்.

சத்தமில்லாத முரளி விஜய்

சத்தமில்லாத முரளி விஜய்

இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று நேந்துவிடப்பட்டிருக்கும் வீரர் என்றால் அது முரளி விஜய் தான். ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் பிறந்த இவர் இதுவரை முக்கியமான எந்த போட்டியிலும் இந்தியாவை ஏமாற்றியதே இல்லை. ஆர்ப்பாட்டமான வீரர்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக சாதனைகளை படைத்து வருகிறார். கிடைக்கும் குறைந்த வாய்ப்பில் மிகவும் நன்றாகவே பார்பார்ம் செய்கிறார். முக்கியமாக கடந்த இரண்டு வருடமாக தனது பார்மை தக்க வைத்து வருகிறார். பல முறை அணியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டாலும் இந்திய டெஸ்டுக்கு தான் முக்கியம் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபணம் செய்கிறார்.

வேற லெவல் அஸ்வின்

வேற லெவல் அஸ்வின்

இந்திய ஸ்பின் புயல். பல முக்கிய வீரர்களின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கை நட்சத்திரம். இன்றைய போட்டியின் மூலம் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து இருக்கும் அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் இவர் ஷேன் வார்னேவின் 'எகனாமியை' நெருங்குவதற்கு இன்னும்பெரிய தூரம் இல்லை. முத்தையா முரளிதரனை தன்னுடைய ரோல் மாடலாக வைத்து இருக்கும் அஸ்வின் சீக்கிரம் அவரின் 800 விக்கெட் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்ப்பார்கலாம்.

இந்தியாவின் ஆபத்பாந்தவர்கள்

இந்தியாவின் ஆபத்பாந்தவர்கள்

இந்த மூன்று பிளேயர்கள் இல்லாமல் இந்திய அணியில் புதிதாக கலக்க இருக்கும் தமிழக வீரர்கள் இருவர் உள்ளனர். விஜய் ஷங்கர், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அணியில் சேர்ந்த விஜய் இனி எதிர்கால டெஸ்ட் போட்டியில் கோஹ்லியின் இடத்தில் விளையாட வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி ஓய்வில் இருக்கும் போது விளையாட போகும் நபர் வாஷிங்டன் சுந்தர். நல்ல ஆல்ரவுண்டரானா விஜயும், 19 வயது கூட ஆகாத சுந்தரும் இந்திய அணியின் முக்கிய எதிர்காலமாக இருப்பார்கள்.

Story first published: Monday, November 27, 2017, 17:20 [IST]
Other articles published on Nov 27, 2017
English summary
In recent times Tamilnadu players doing great acheivements in Indian team. The Indian team is now depends on 4 Tamilnadu players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X