For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாஸ்க் போட்டுக்கிட்டு பௌலிங் போடணுமா.... பௌலர்ஸ் பத்தி யோசிக்கவே மாட்டீங்களா?

மும்பை : மாஸ்க் போட்டுக் கொண்டு பௌலிங் செய்வது மிகவும் சங்கடமான விஷயம் என்று முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்துவதற்கு அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தடைவிதிக்க பரிந்துரைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்கும்வகையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இது இடைக்கால நடவடிக்கையாகவே இருக்கும் என்றும் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

தோனி, ரோஹித், கோலி மர்மமான பேட்டிங்.. உலகக்கோப்பை தோல்வி பற்றி ஷாக் புகார்.. வெடித்த சர்ச்சை!தோனி, ரோஹித், கோலி மர்மமான பேட்டிங்.. உலகக்கோப்பை தோல்வி பற்றி ஷாக் புகார்.. வெடித்த சர்ச்சை!

ஐசிசி அறிவிப்பு

ஐசிசி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேலாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறாமல் முடங்கியுள்ளன. இந்நிலையில், கால்பந்து போட்டிகள் சமூக விலகலுடன் துவங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளையும் துவக்க ஐசிசி முடிவெடுத்து அதற்கென சில விதிமுறைகளை வகுத்துள்ளது. முன்னதாக அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி, பந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடை விதித்து பரிந்துரைத்தது. ஐசிசியின் விதிமுறைகளில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.

பீல்டர்களும் செய்வார்கள்

பீல்டர்களும் செய்வார்கள்

ஐசிசியின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், தற்போதைய சூழலில் இதை ஏற்கவே செய்கின்றனர். இந்நிலையில், மைதானத்தில் பௌலர்கள் மட்டுமே பந்துகளை ஷைன் செய்வதில்லை என்று முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக பீல்டர்களும் இந்த வழக்கத்தை பின்பற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நுரையீரல் பாதிக்கப்படும்

நுரையீரல் பாதிக்கப்படும்

பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்துவதை தடை செய்ததன்மூலம், பௌலர்களின் முக்கியமான ஒரு விஷயம் அவர்களிடம் இருந்து பறிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மாஸ்க் அணிந்துக்கொண்டு ஓடினால் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாளைக்கு 20 ஓவர்களை மாஸ்க் அணிந்துக்கொண்டு செய்வதன்மூலம் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Recommended Video

Sachin Tendulkar's rare bowling records
மருத்துவர் மறுப்பு

மருத்துவர் மறுப்பு

ஆனால் ரிலையன்ஸ் மருத்துவமனையின் புனர்வாழ்வு மற்றும் விளையாட்டு பிரிவு டைரக்டர் டாக்டர் ஆஷிஷ் கான்ட்ராக்டர் இதை மறுத்துள்ளார். வெறுமனே பார்வேர்ட் செய்திகளை கருத்தில் கொண்டு இவ்வாறு பேசக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். ஒன்றிரண்டு சம்பவங்கள் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறியுள்ள அவர், ஆனால், இதற்கு மருத்துவப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, May 27, 2020, 11:57 [IST]
Other articles published on May 27, 2020
English summary
Using Saliva on the Ball is a common Habit -Ajit Agarkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X