For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் அண்ணன் இறந்ததா புரளி கிளப்பினவனை சும்மா விட மாட்டேன்.. சூளுரைத்த பிரெண்டன் மெக்குலம்

Recommended Video

நாதன் மெக்குலம் இறந்ததாக புரளி, கோபமடைந்த பிரெண்டன் மெக்குலம்- வீடியோ

வெலிங்டன் : முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன் மெக்குலம் இறந்து விட்டதாக கடந்த சனிக்கிழமை வதந்தி பரவியது.

பலரும் இதை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் இந்த செய்தியை பரப்பி வந்தார்கள்.

பின்னர் நாதன் மெக்குலம் தான் நலமாக இருப்பதாக கூறியதன் மூலம் இது பொய் செய்தி என்ற தகவல் வெளியானது. ஆனால், இந்த விவகாரம் நாதனின் இளைய சகோதரர் பிரெண்டன் மெக்குலமை கோபமடைய வைத்துள்ளது.

காட்டுத் தீயாக பரவிய செய்தி

காட்டுத் தீயாக பரவிய செய்தி

கடந்த சனிக்கிழமை நாதன் மெக்குலம் இறந்து விட்டதாக காட்டுத் தீயாக செய்தி பரவியது. மருத்துவமனையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் நாதன் இறந்துவிட்டார் என செய்தியில் கூறப்பட்டு இருந்தது. இது உண்மை பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் நம்பினர்.

பொய் செய்தி தான்

இந்த நிலையில், தான் நன்றாக இருப்பதாக கூறி ட்விட்டரில் புகைப்படத்தை பதிவிட்டார் நாதன். இதையடுத்து இறப்பு செய்தி பொய் என்ற தகவல் உறுதியானது.

இந்திய வீரர்கள் விசாரிப்பு

இந்திய வீரர்கள் விசாரிப்பு

இதற்கு இடையே இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமைப்பை தொடர்பு கொண்டு இந்த செய்தி உண்மையா என கேட்டுள்ளனர். அந்த அமைப்பின் தலைவர் ஹீத் மில்ஸ் பின்னர் நாதன் மெக்குலமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் நலமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

கோபம் அடைந்த பிரெண்டன்

இந்த பொய் செய்தியால் கோபமடைந்துள்ள நாதனின் சகோதரர் பிரெண்டன் தான் விமானத்தில் நியூசிலாந்துக்கு வந்து கொண்டு இருப்பதாகவும், தான் இதயம் நொறுங்கிய நிலையில் இருப்பதாகவும் கூறி இருந்தார். மேலும், இந்த செய்தி எதுவும் உண்மை இல்லை. "இந்த செய்தியை பதிவிட்ட உன்னை எங்கேயாவது, எப்படியாவது கண்டுபிடிப்பேன்" என கொக்கரித்து உள்ளார்.

Story first published: Monday, December 3, 2018, 12:26 [IST]
Other articles published on Dec 3, 2018
English summary
Brendon McCullum angry over fake news about his brother’s death and says he will find the culprit who spread this news.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X