For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் வங்கதேசத்துடன் இங்கிலாந்து மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை 50 ஓவர் கிரிகெட் போட்டிகள் இங்கிலாந்தில் நாளை தொடங்கவுள்ளது.

By Kalai Mathi

இங்கிலாந்து: சாம்பியன்ஸ் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்க உள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன.

இங்கிலாந்தில் ஜூன் மாதத்தில் அடிக்கடி மேக மூட்டம், மழை என பருவநிலை மாறும் இது பிட்சின் தன்மைக்கு சிக்கலாக இருக்கும். இதற்று நேற்று முன்தினம் நடைபெற்ற இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டியே சிறந்த எடுத்துக்காட்டு.

நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராபா மற்றும வேனே பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி படுதோல்வியடைந்தது. இருப்பினும் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றது.

இந்தியாவிடம் சுருண்ட வங்கதேசம்

இந்தியாவிடம் சுருண்ட வங்கதேசம்

இதேபோல் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 324 ரன்கள் குவித்திருந்த நிலையில் பங்களாதேஷ் அணி 84 ரன்களுக்கு சுருண்டது. 240 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

நாளை தொடக்கம்

நாளை தொடக்கம்

இந்நிலையில் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

8 அணிகள் மோதல்

8 அணிகள் மோதல்

சாம்பயின்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பிடித்துள்ளன.

அரையிறுதிக்கு 4 அணிகள்

அரையிறுதிக்கு 4 அணிகள்

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

இங்கிலாந்து-வங்கதேசம் மோதல்

இங்கிலாந்து-வங்கதேசம் மோதல்

நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 4ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

இதைத்தொடர்ந்து 8 ஆம் தேதி இலங்கையையும், 11-ந் தேதி தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது. முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Story first published: Friday, June 2, 2017, 12:32 [IST]
Other articles published on Jun 2, 2017
English summary
A green-tinged pitch did not find favour with England captain Eoin Morgan but even on more placid surfaces the issue of how best to bat under grey skies, which can often set in all day in England, as many a cold fan knows, remains
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X