ஐபிஎல்லில் கலக்கப்போகும் டோணியின் சிங்கக் குட்டிகள் இவர்கள்தான்

Posted By:

சென்னை: ஐபிஎல்னா சென்னை சூப்பர் கிங்ஸ்தான். சென்னை சூப்பர் கிங்ஸ்னா அது தல டோணிதான். சிங்கம் சிங்கிளாத்தான் வரும். ஆனால் கூடவே, சிங்கக் குட்டிகளுடன் மீண்டும் களமிறங்கி, ஐபிஎல்லில் நாங்கதான் ராஜா என்று காட்டுவதற்கு டோணியின் அணி தயாராக உள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்டமான மற்றும் பிரபலமான, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியைப் பற்றி. 10 சீசன்களைத் தாண்டி, 11வது சீசனில் காலடி எடுத்து வைக்கும் ஐபிஎல் போட்டிக்கான பரபரப்பு, எதிர்பார்ப்பு எள்ளளவும் குறையவில்லை.

இந்த முறை மற்றொரு சிறப்பு, முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குவதுதான். இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மீண்டும் களமிறங்குகின்றன. இதில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, பத்மபூஷண், கேப்டன் கூல், கிரிக்கெட் தல மகேந்திர சிங் டோணி மீண்டும் கேப்டனாகியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

 இரண்டு முறை சாம்பியன்கள்

இரண்டு முறை சாம்பியன்கள்

இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் என, பேரைக் கேட்டாலே அதிரவைக்கும் அணியாக சிஎஸ்கே உள்ளது. வேறெந்த அணிக்கும் இல்லாத மற்றொரு சி்றப்பு, இதுவரை அனைத்து சீசனிலும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்பதாகும்.

 ஏலத்தில் ஆச்சரியமூட்டியது

ஏலத்தில் ஆச்சரியமூட்டியது

இரண்டாண்டுகளுக்குப் பிறகு திரும்புவதால், இந்த சீசனில் சிஎஸ்கே மீது தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அணிக்கான டோணி, சின்ன தல சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அணி தக்க வைத்தது. வீரர்களுக்கான ஏலத்தின்போது, பா டுபிளாசி, டாய்னே பிராவோ, முரளி விஜய் போன்ற முந்தைய வீரர்களை ஏலம் எடுத்தது. அதைத் தவிர மற்ற அணிகள் ஏலத்தில் தலையை பிய்த்துக் கொண்டிருக்கையில், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், ஷர்துல் தாகுர், இம்ரான் தாகிர், அம்பாடி ராயுடு ஆகியோரை ஏலத்தில் எடுத்து ஆச்சரியமூட்டியது.

 சிஎஸ்கேயின் பதில்

சிஎஸ்கேயின் பதில்

பெரும்பாலும் சீனியர் வீரர்களையே ஏலம் எடுத்ததால் மற்ற அணிகள் குழம்பின. வீரர்களின் சரா சரி வயது 30ஆக இருந்தபோது, சில இளம் வீரர்களை ஏலம் எடுத்தது சிஎஸ்கே. என்னடா இது, ஒன்னுமே புரியலயே என்று அனைவரும் குழம்பியபோது, டோணியே எங்ககிட்ட இருக்கார் என்பதுதான் சிஎஸ்கேவின் பதிலாக இருந்தது. ஐபிஎல்லில் மிகச் சிறந்த கேப்டன், அதிக போட்டிகளி்ல் விளையாடியவர், அதிக வெற்றி சதவீதம் என, அதிகம் அதிகம் என்று சொல்லக் கூடிய அனைத்து சாதனைகளும் டோணியிடம்தான் உள்ளது. தன்னுடைய பழைய பெருமையை தக்க வைக்கும் வகையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 அணி விவரம்

அணி விவரம்

மகேந்திர சிங டோணி கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பா டுபிளாசி, ஹர்பஜன் சிங், டாய்னே பிராவோ, ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், அம்பாடி ராயுடு, தீபக் சாகர், கேஎம் ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கி நிகிடி, துருஷ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங், மார்க் வுட், ஷிதிஷ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்னோய், இம்ரான் தாகிர், கர்ன் சர்மா,ஷர்துல் தாகுர், ஜெகதீசன்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Chennai super kings raring to go in the IPL seaon 11
Story first published: Thursday, April 5, 2018, 16:49 [IST]
Other articles published on Apr 5, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற