For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் ஐபிஎல்.. சிஎஸ்கே அணியில் ஸ்மிருதி மந்தனா, கேட் கிராஸ்.. ஆஸி. வீராங்கனைகளும் வராங்களாம்!

சென்னை: மகளிர் ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், சென்னை அணிக்காக ஸ்மிருதி மந்தனா ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Harmanpreet Kaur-ன் Stunning 143 Runs! England-ல் India-வின் Historic Win | Aanee's Appeal

கோடைக் காலத்தில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. ஐபிஎல் தொடர் திருவிழாவை போல் தொடர்ச்சியாக 2 மாதங்கள் நடத்தப்படுவதால், உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஐபிஎல் தொடர் பக்கம் தான் திரும்பி இருக்கும்.

ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ஆச்சரியத்தை கொடுக்கும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அண்மைக் காலமாக சர்வதேச கிரிக்கெட்டை விடவும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிருக்கான ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வரும் தி ஹண்ரட் தொடர் போல் இந்தியாவில் மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால், இந்திய மகளிர் அணியும் அசைக்க முடியாத சக்தியாக திகழும் என்று குரல்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் மகளிருக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 - தோனி சென்னையில் விளையாடுவது உறுதி.. பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடு.. முழு விவரம்ஐபிஎல் 2023 - தோனி சென்னையில் விளையாடுவது உறுதி.. பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடு.. முழு விவரம்

விரைவில் மகளிர் ஐபிஎல்

விரைவில் மகளிர் ஐபிஎல்

மகளிருக்கான ஐபிஎல் தொடர் 5 அல்லது 6 அணிகள் மூலம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஐபிஎல் அணிகளை வாங்கிய தொழிலதிபர்கள், பிரபலங்கள் மகளிர் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டால், நிச்சயம் அணிகளை வாங்க ஆர்வமாக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் அணிகள் ஆர்வம்

ஐபிஎல் அணிகள் ஆர்வம்

குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் மகளிர் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் பலரும் தென் ஆப்பிரிக்கா லீக் தொடரில் அணிகளை வாங்கியுள்ளனர். இதனால் மகளிர் கிரிக்கெட்டிலும் கால் பதிக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், மகளிர் ஐபிஎல் தொடர் 2023ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது உண்மைதான். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

 ஸ்மிருதி மந்தனா ஒப்பந்தம்?

ஸ்மிருதி மந்தனா ஒப்பந்தம்?

அதேபோல் சென்னை அணியின் சில நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், மகளிருக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்படவுள்ளது. சென்னை அணிக்காக எப்படி தோனியை சிறு வயதிலேயே ஒப்பந்தம் செய்தோமோ, அதேபோல் ஸ்மிருதி மந்தனா ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேபோல் சர்வதேச வீராங்கனையான கேட் கிராஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது சென்னை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, September 22, 2022, 18:54 [IST]
Other articles published on Sep 22, 2022
English summary
Chennai Super Kings plans to Buy Womens Team in IPL. Also Plans to sign a contract with Indian Player Smriti Mandhana as Captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X