ஜெயிச்சுதாங்க ஆகணும்... நெருக்கடியில் சிஎஸ்கே... ராஜஸ்தானுடன் மோதும் 'தல' அணி

அபுதாபி : தொடர்ந்து தோல்வி முகத்தை ரசிகர்களுக்கு காட்டிவரும் சிஎஸ்கே நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் மோதவுள்ளது.

இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே, புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் நாளைய ஐபிஎல்லின் 37வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ள போட்டியில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில சிஎஸ்கே உள்ளது.

இனி சாக்குபோக்கு சொல்ல முடியாது.. தோனிக்கு கடைசி சான்ஸ்.. கலக்கத்தில் சிஎஸ்கே நிர்வாகம்!

3ல் மட்டுமே வெற்றி

3ல் மட்டுமே வெற்றி

இதுவரை விளையாடியுள்ள சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் சிஎஸ்கே இருந்ததில்லை. இந்நிலையில் இந்த சீசனில் அது கேள்விக்குறியாகியுள்ளது. சிஎஸ்கேவின் இந்த சீசனின் ஆட்டங்கள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 3ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணியுடன் மோதல்

ராஜஸ்தான் அணியுடன் மோதல்

இதையடுத்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி முன்னேற வேண்டுமென்றால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. இந்நிலையில் நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது.

வெற்றிபெற வேண்டிய நிலையில் அணிகள்

வெற்றிபெற வேண்டிய நிலையில் அணிகள்

ஐபிஎல்லின் 37வது போட்டியில் இரு அணிகளும் நாளை அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் மோதவுள்ளன. பிளே- ஆப் சுற்றிற்கு தகுதி பெற சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த போட்டிகளில் தோல்வியுற்றுள்ள நிலையில் இதில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கை அளிக்கும் வீரர்கள்

நம்பிக்கை அளிக்கும் வீரர்கள்

ராஜஸ்தான் அணியின் ஸ்டீவ் ஸ்மித், உத்தப்பா உள்ளிட்டவர்கள் டாப் ஆர்டரில் சிறப்பாக உள்ள நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்டவர்களும் நம்பிக்கை அளித்து வருகின்றனர். இதேபோல சிஎஸ்கேவின் டூ பிளசிஸ், ஷேன் வாட்சன், ராயுடு, ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு

பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு

இந்நிலையில் நாளைய 37வது போட்டியில் வெயில் அதிகமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல டாஸ் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் முதலில் பேட்டிங் செய்பவர்கள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள நிலை காணப்படுகையில், இந் போட்டியில் டாஸ் சிறப்பாக பங்கு வகிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The season has so far seen that the team’s batting first have won most number of matches
Story first published: Sunday, October 18, 2020, 18:34 [IST]
Other articles published on Oct 18, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X