For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம புஜாராவா இது.. இந்திய டெஸ்ட் வரலாற்றில் அட்டகாச சாதனை.. மெகா கம்பேக் என ரசிகர்கள் புகழாரம்!

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா மெகா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் பேட்டிங் பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை.

மேலும் ஒரு ஸ்டார் வீரருக்கு காயம்.. வங்கதேச டெஸ்டில் இந்தியாவுக்கு பெரும் அடி.. இனி என்ன செய்வார்கள்மேலும் ஒரு ஸ்டார் வீரருக்கு காயம்.. வங்கதேச டெஸ்டில் இந்தியாவுக்கு பெரும் அடி.. இனி என்ன செய்வார்கள்

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் 54 பந்துகளில் 22 ரன்களை மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு ஓப்பனர் சுப்மன் கில் 20 ரன்களுக்கெல்லாம் அவுட்டானார். இதன் பின்னர் வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி வெறும் 1 ரன்னுக்கு துரதிஷ்டவமாக விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி 478 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

புஜாராவின் இன்னிங்ஸ்

புஜாராவின் இன்னிங்ஸ்

அப்போது மறுமுணையில் இருந்த சட்டீஸ்வர் புஜாரா அணியை மீட்டுக்கொண்டு வந்தார். தனக்கே உரிய பாணியில் தூண் போல நிலைத்து நின்று ஆடிய புஜாரா 203 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 90 ரன்களை குவித்தார். எனினும் துரதிஷ்டவசமாக அவரால் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. தாய்ஜுல் இஸ்லாம் வீசிய பந்தில் எதிர்பாராவிதமாக அவுட்டாகினார்.

புதிய சாதனை படைப்பு

புதிய சாதனை படைப்பு

இந்நிலையில் இந்த ரன்குவிப்பின் மூலம் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் புஜாரா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார் 116 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,868 ரன்களை குவித்து 8வது இடத்தில் இருந்து வந்தார். ஆனால் புஜாரா தற்போது 6,882 ரன்களுடன் அவரை முந்தியுள்ளார்.

 அதிக ரன்கள் அடித்தவர்கள்

அதிக ரன்கள் அடித்தவர்கள்

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியல்

சச்சின் டெண்டுல்கர் - 15,921 ரன்கள்

ராகுல் டிராவிட் - 13, 265 ரன்கள்

சுனில் கவாஸ்கர் - 10,122 ரன்கள்

வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் - 8,781 ரன்கள்

விரேந்தர் சேவாக் - 8,503 ரன்கள்

விராட் கோலி - 8,075 ரன்கள்

சவுரவ் கங்குலி - 7,212 ரன்கள்

சட்டீஸ்வர் புஜாரா - 6,882 ரன்கள்

 முதல் நாளின் முடிவு

முதல் நாளின் முடிவு

ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுணையில் புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் 48 ரன்களுக்கு 3 விக்கெட்கள் என இருந்த இந்திய அணி 261 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என வலுவான நிலைக்கு சென்றது. இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை குவித்துள்ளது. புஜாராவுக்கு உறுதுணையாக நின்று ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது 82 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, December 14, 2022, 19:50 [IST]
Other articles published on Dec 14, 2022
English summary
Cheteshwar Pujara reaches a new milestone in India vs bangladesh 1s Test match, Here is the full details of the record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X