For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துண்டை அவிழ்த்த விவகாரம்... ஃபேர்பேக்ஸ் மீடியா மீது கேஸ் போடுகிறார் கிறிஸ் கெய்ல்

By Siva

மெல்போர்ன்: கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது சான்ட்விச் தேடி வீரர்கள் உடை மாற்றும் இடத்திற்கு சென்ற ஆஸ்திரேலிய பெண்ணிடம் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காட்டியதாக தெரிவித்த ஃபேர்பேக்ஸ் மீடியா மீது அவர் அவதூறு வழக்கு தொடர உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி22 பிக்பாஷ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் விளையாடி வருகிறார். கடந்த திங்கட்கிழமை அவர் டிவி நிகழ்ச்சி வர்ணனையாளரான மெல் மெக்லாலின் என்ற பெண்ணிடம் மது அருந்தப் போகலாம் என்று கூறி பிரச்சனையில் சிக்கினார். இதற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் உதவிக்கு ஆஸ்திரேலிய பெண் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

அநாகரீகம்

அநாகரீகம்

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு உதவியாக இருந்த பெண் வீரர்கள் உடை மாற்றும் அறையில் பசிக்கு சான்ட்விச் தேடுகையில் கிறிஸ் கெய்ல் தனது இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்து அவரிடம் இதை தான் தேடுகிறாயா என கேட்டு தனது ஆணுறுப்பை காட்டியதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபேர்பேக்ஸ் மீடியா செய்தி வெளியிட்டது.

வழக்கு

வழக்கு

அந்த பெண்ணிடம் தான் அநாகரீகமாக நடக்கவில்லை என்று தெரிவித்துள்ள கெய்ல் ஃபேர்பேக்ஸ் மீடியா நிறுவனம் மீது அவதாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

மறுப்பு

மறுப்பு

தான் அவ்வாறு செய்யவில்லை என கெய்ல் மறுப்பு தெரிவித்தும் ஃபேர்பேக்ஸ் மீடியா மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்தி வெளியிட்டது. அதை அடிப்படையாக வைத்து பிற ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இதையடுத்து அவதூறு வழக்கு தொடருமாறு முன்னணி ஆஸ்திரேலிய வழக்கறிஞர் மார்க் ஓ பிரையனிடம் கெய்ல் தெரிவித்துள்ளார் என அவரின் மேனேஜர் சைமன் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 7, 2016, 16:00 [IST]
Other articles published on Jan 7, 2016
English summary
Under-fire West Indies cricketer Chris Gayle has sought the services of a leading Australian lawyer to start defamation proceedings against media group Fairfax Media over allegations that the West Indian cricketer indecently exposed himself to a woman in Sydney during the World Cup last year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X