ஆஸி. பெண்ணிடம் ஆபாசமாக நடந்த வழக்கு.. ஸ்மித் சாட்சியத்தால், கிறிஸ் கெயில் வெற்றி!

சிட்னி : 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது தன்னைப்பற்றிய அவதூறு செய்தி வெளியிட்டதற்காக ஆஸ்திரேலிய பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான தெற்கு வேல்ஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார் மேற்க்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல்.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், அந்த நிறுவனம் போதிய ஆதாரங்களை அளிக்கத்தவறிவிட்டது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இனிமேலும் இதுபோன்ற செய்திகள் வெளியிட்டால் பத்திரிகையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுப்பபடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

பெண் புகார் குறித்து செய்தி

பெண் புகார் குறித்து செய்தி

2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. அப்போது அங்கு தங்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் தனக்கு மசாஜ் செய்ய வந்த ரஸ்ஸல் என்கிற பெண்ணிடம், அவரது விருப்பமின்றி நிர்வாணமாக உடலைக் காட்டினார் என்று செய்தி வெளியானது.

மசாஜ் பெண் அளித்த புகார்

மசாஜ் பெண் அளித்த புகார்

மேலும் தனக்கு சில கிரிக்கெட் வீரர்கள் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மன உளைச்சல் அடைந்த அவர் பத்திரிகை நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த புகாரை அளித்தார். அவர்கள் வெளியிட்ட செய்திக்கு அப்போதே மறுப்பு தெரிவித்தார் கிறிஸ் கெய்ல்.

நான் நல்லவன் - கெய்ல் மகிழ்ச்சி

நான் நல்லவன் - கெய்ல் மகிழ்ச்சி

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ‘ இந்த வழக்கில் என்னுடைய வாதத்தை நிறைவு செய்வதற்காகவே ஜமைக்காவில் இருந்து வந்து இருக்கிறேன். என்னைப் பற்றி அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி என்னை நிலைகுலையவைத்துவிட்டது. இன்று அதற்கான நீதி எனக்குக் கிடைத்துள்ளது. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டார்.

நான் நல்லவன் - கெய்ல் மகிழ்ச்சி

நான் நல்லவன் - கெய்ல் மகிழ்ச்சி

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ‘ இந்த வழக்கில் என்னுடைய வாதத்தை நிறைவு செய்வதற்காகவே ஜமைக்காவில் இருந்து வந்து இருக்கிறேன். என்னைப் பற்றி அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி என்னை நிலைகுலையவைத்துவிட்டது. இன்று அதற்கான நீதி எனக்குக் கிடைத்துள்ளது. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டார்.

அபராதத் தொகை அறிவிப்பு

அபராதத் தொகை அறிவிப்பு

வழக்கில் கிறிஸ் கெய்லுக்கு ஆதரவாக தீர்ப்பு மட்டுமே வெளியாகி இருக்கிறது. இன்னும் அபராதத்தொகை அறிவிக்கப்படவில்லை. அது நாளை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்த கருத்து தெரிவித்த பேர்பேக்ஸ் நிறுவன அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

Story first published: Monday, October 30, 2017, 14:23 [IST]
Other articles published on Oct 30, 2017
Please Wait while comments are loading...