For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆறு விக்கெட் எடுத்தாலும் டோணியிடம் திட்டு வாங்கிய சஹல்.. ஏன் தெரியுமா?

By Veera Kumar

பெங்களூர்: எப்போதுமே கூலாக காணப்படும் முன்னாள் கேப்டன் டோணி, நேற்று பவுலர் சஹலிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி ஆச்சரியமூட்டினார்.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் வெற்றி இலக்கு என்ற போதிலும், பேட்டிங்கின் சொர்க்கபுரியான பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் அது எட்டக்கூடிய ஒன்று என்பதால் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கிலும் அலர்ட்டாகவே இருந்தனர்.

பவர் பிளே ஓவர் என்றபோதிலும், ஆட்டத்தின் 2வது ஓவரை வீசும் பொறுப்பை இளம் சுழற்பந்து வீச்சாளர் சஹலுக்கு கொடுத்தார் கேப்டன் விராட் கோஹ்லி.

சஹல் அபாரம்

சஹல் அபாரம்

கேப்டன் கோஹ்லி நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார் சஹல். சாம் பில்லிங்ஸ் நடையை கட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயே மற்றொரு விக்கெட்டான ஜேசன் ராய்-யை வீழ்த்தும் ஒரு வாய்ப்பை தவறவிட்டார் சஹல்.

ரன் முயற்சி

ரன் முயற்சி

சஹல் வீசிய அந்த பந்தை எதிர்கொண்டது ஜோ ரூட். அவர் மிட்-ஆப் திசையில் பந்தை அடித்துவிட்டு ரன் ஓட எத்தனித்தார். எதிர்முனையில் இருந்த ஜேசன் ராயும் ஓட ஆரம்பித்தார். ஆனால் கோஹ்லி டைவ் செய்து பந்தை பிடித்து அதே வேகத்தில் சஹலை நோக்கி எறிந்தார்.

கோட்டைவிட்ட சஹல்

கோட்டைவிட்ட சஹல்

கோஹ்லியின் துரிதத்தை பார்த்து அஞ்சிய ஜோ ரூட், உடனடியாக ரன் ஓடும் முடிவை மாற்றிக்கொண்டார். ஜேசன் ராயை நோக்கி ஓடிவர வேண்டாம் என கூறினார். ஆனால் ஜேசன் ராய் தடதடவென ஓட ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் சஹல் தனது கையில் வந்து சேர்ந்த பந்தை டோணியிடம் வீசினார். அவர் ஜோ ரூட்டை அவுட் செய்யும் எண்ணத்தில் அப்படி செய்தார். ஆனால் ரூட் எளிதாக கிரீசுக்குள் போய்விட்டார். ஆனால், எதிர்முனையில் ஜோசன் ராய் பாதி பிட்ச் அளவுக்கு ஓடி வந்ததால் தாமதமாகவே கிரீசுக்குள் திரும்பினார்.

கோபப்பட்ட டோணி

இப்படி ஒரு வாய்ப்பை பயன்படுத்தி சஹல் நினைத்திருந்தால் ஜேசன் ராயை அவுட் செய்திருக்க முடியும். ஆனால் பதற்றத்தில் பந்தை டோணியிடம் வீசிவிட்டார். இதனால் டோணி ஆத்திரமடைந்து கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு சஹலை நோக்கி கத்தினார். 'அங்கேயுள்ள ஸ்டம்பில் அடிக்க வேண்டியதுதானே' என டோணி கூறியதாக தெரிகிறது.

சாதனை

சாதனை

எப்போதுமே கூலாக இருக்கும் டோணி நேற்று ஆக்ரோஷமாக மாறியது பெங்களூர் ரசிகர்களை ஒரு நிமிடம் உறையச் செய்தது. பிறகு டோணியும், ரசிகர்களும் இயல்பு நிலைக்கு திரும்பினர். ஆனால் டோணியிடம் திட்டு வாங்கிய ராசியோ என்னவோ, சஹல் அதன்பிறகு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக வீழ்த்திய ஒரு விக்கெட்டையும் சேர்த்து 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து, டி20 வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற கவுரவமும் அவருக்கு வந்து சேர்ந்தது.

Story first published: Thursday, February 2, 2017, 11:36 [IST]
Other articles published on Feb 2, 2017
English summary
The generally cool tempered Dhoni shouted at Chahal and made an aggressive move at Bengaluru match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X