அடடே.. கடைசியில் ஐசிசி போர்டு மீட்டிங்கையே கேன்சல் பண்ண வச்சிருச்சே.. இந்த கொரோனா!

மும்பை : சர்வதேசஅளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரல் தாக்குதலையடுத்து ஐசிசி தலைமை நிர்வாகிகளின் 4 நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Corona threat | ICC board meeting cancelled

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தையடுத்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் தன்னுடைய பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வசேத அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் பல கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள் போன்றவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் போர்டு உறுப்பினர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் பின்னர் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எப்போது மற்றும் எங்கு நடத்தப்படும் என்பது குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வரும் ஜூன் மாதத்தில் நடத்தப்படும் ஐசிசி ஆண்டு பொதுக்குழு கூட்டத்தடன் இணைத்து இந்தக் கூட்டமும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிவெடுக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசசி தலைவர் சஷாங்க் மனோகர், இந்தக் கூட்டத்துடன் தன்னுடய பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், தொடர்ந்து பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்றும் கடந்த வாரங்களில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தக் கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமலேயே விடைபெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. ஐசிசி மற்றும் ஏசிசியின் இந்தக் கூட்டங்கள் தற்போது ரத்தானதால், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகயுள்ள இந்த சர்வதேச நிர்வாகக்குழு மேலும் நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
No further date has been allotted for the ICC meeting
Story first published: Wednesday, March 11, 2020, 18:32 [IST]
Other articles published on Mar 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X