For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் தொடரில் தோனி மகத்தான சாதனை.. மும்பைக்கு எதிராக கடைசியாக விளையாடினாரா தோனி?

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே கேப்டன் தோனி ஒரு மகத்தான சாதனையை செய்துள்ளார்.

நேற்றைய வாழ்வா சாவா ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் தோனி மட்டும் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நின்றார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த போட்டியல் மும்பை வெற்றி பெற்றதன் மூலம் சிஎஸ்கே நாக் அவுட் ஆனது.

ஐபிஎல்- 5 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வந்த மும்பை, சிஎஸ்கே ஆதிக்கம்- சொதப்பலுக்கு காரணம் என்ன? ஐபிஎல்- 5 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வந்த மும்பை, சிஎஸ்கே ஆதிக்கம்- சொதப்பலுக்கு காரணம் என்ன?

சிஎஸ்கே Vs மும்பை

சிஎஸ்கே Vs மும்பை

இந்த நிலையில், மும்பைக்கு எதிராக கடைசி போட்டியில் தோனி களமிறங்கினாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஐபிஎல் தொடரின் அடையாளமாக சிஎஸ்கேவும், மும்பையும் உள்ளது. இரு அணிகளும் மோதினால் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கர்கள் எப்படி பார்ப்பார்களோ, அதே போன்ற ஒரு ஆர்வத்துடன் இந்தப் போட்டியை கருதுவார்கள்.

தோனி கடைசி போட்டி

தோனி கடைசி போட்டி

ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்று போற்றப்படம் அளவுக்கு இந்தப் போட்டி மாறியதற்கு முக்கிய காரணம் தோனி தான், அப்படி பட்ட தோனிக்கு வயது 40 ஆகிவிட்டது. அடுத்த சீசன் வந்தால் 41. இதனால் இனி ஐபிஎல் போட்டியில் தோனியால் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தோனி பாடி லெங்வஜ்

தோனி பாடி லெங்வஜ்

அதற்கு ஏற்றபார் போல், இந்த சீசனில் தோனி தனது அதிரடி பேட்டிங்கில் ஈடுபட்டார். மும்பைக்கு எதிரான போட்டியில் கூட தோனி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் நின்று விளையாடியது போல் இருந்தது. இதனை பார்த்ததும் பலர், மும்பைக்கு எதிராக கடைசியாக தோனி விளையாடுவதை பார்க்கிறோம் என்று இணையத்தில் கமெண்ட் செய்து வந்தனர்.

Recommended Video

IPL 2022: இதுவரை பொளந்து கட்டிய Longest Sixes | Livingstone vs Pooran | OneIndia Tamil
மகத்தான சாதனை

மகத்தான சாதனை

கடைசி போட்டியாக இருந்தாலும், தோனி ஒரு மகத்தான சாதனையை நேற்றைய ஆட்டத்தில் செய்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் 16 ஓவரிலிருந்து 20 ஓவர் வரையிலான பகுதியில் மொத்தமாக 3 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். சரியாக 3033 ரன்கள் அடித்துள்ள தோனி, மொத்தம் 171 சிக்சர்களை விளாசியுள்ளார்.

Story first published: Friday, May 13, 2022, 12:07 [IST]
Other articles published on May 13, 2022
English summary
CSK Captain MS Dhoni created World record in IPL History ஐபிஎல் தொடரில் தோனி மகத்தான சாதனை.. மும்பைக்கு எதிராக கடைசியாக விளையாடினாரா தோனி?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X