For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைவன் இருக்கின்றான்.. சிஎஸ்கே கேப்டன் யார் ? சிஇஓ காசி பதில்.. பிராவோவை விட்டோம்னு யார் சொன்னா?

சென்னை : ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் யார் கேப்டனாக செயல்பட போகிறார் என்று கேள்விக்கு தலைவன் இருக்கின்றான் என்று அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடருக்கு முன் எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்பது குறித்து பிசிசிஐ இடம் இன்று 10 அணிகளும் பட்டியலை சமர்ப்பித்தன.

இதில் சிஎஸ்கே அணி 9 வீரர்களை விடுவித்துள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை அணியில் இருந்த பிராவோவை சி எஸ் கே விடுவித்து இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளிலிருந்து பொலார்ட் ஓய்வு.. மும்பை இந்தியன்ஸ் முடிவால் ஓய்வை அறிவித்தார்ஐபிஎல் போட்டிகளிலிருந்து பொலார்ட் ஓய்வு.. மும்பை இந்தியன்ஸ் முடிவால் ஓய்வை அறிவித்தார்

கடினமான முடிவு

கடினமான முடிவு

இது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் , இது மிகவும் கடின மனத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. ஏனென்றால் சிஎஸ்கே வில் வீரர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்போம். இதேபோன்று அவர்களும் அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை விடுவிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உடன் இணைந்து தான் யாரை தக்க வைப்பது, யாரை விடுவிப்பது என்பது குறித்து முடிவு எடுத்தோம். வெளிநாட்டு வீரர்களில் ஆடம் மிலின், கிறிஸ் ஜார்டன் மற்றும் பிராவோ ஆகியோர் விடுவிக்கப்படுகிறார்கள். உத்தப்பா ஓய்வு பெற்று விட்டதால் அவர் அணியில் இல்லை. இதைப் போன்று முகமது ஆசிப் , ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அணியிலிருந்து செல்லும் வீரர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு சீசன்களாக சென்னை அணி தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாட முடியவில்லை. தற்போது அதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை மைதானம் எப்படி செயல்படும் என்பதை கருத்தில் கொண்டு அணியை கட்டமைத்துள்ளோம். அதேபோல் இன்னொன்று ஒரு விஷயத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மீண்டும் வருவார்கள்

மீண்டும் வருவார்கள்

இது இறுதி முடிவு கிடையாது. விடுவிக்கப்பட்ட வீரர்களில் இருந்து யாரேனும் மீண்டும் இனி ஏலத்தின் மூலம் அணிக்குள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று காசி விஸ்வநாதன் கூறினார். இதேபோன்று 2020 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் கோப்பையை வென்றது போல் மீண்டும் இந்த சீசனில் சொதப்பியதால் அடுத்த சீசனில் கோப்பை வெல்வோம் என்று நம்புவதாக காசி விஸ்வநாதன் கூறினார்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

தற்போது சென்னை அணியிடம் 20 கோடியே 45 லட்சம் ரூபாய் உள்ளது. தோனி (கேப்டன்), கான்வே, ருத்துராஜ், அம்பத்தி ராயுடு, சுப்ரான்சூ சேனாபதி,மொயின் அலி, சிவம் துபே, ராஜவர்த்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சாண்ட்னர், ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரானா, சிம்ரஜித் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சொலங்கி, மகீஷ் தீக்சணா.

Story first published: Tuesday, November 15, 2022, 19:47 [IST]
Other articles published on Nov 15, 2022
English summary
CSK CEO Kasi Vishwanathan reveals about the Players retention and released list தலைவன் இருக்கின்றான்.. சிஎஸ்கே கேப்டன் யார் ? சிஇஓ காசி பதில்.. பிராவோவை விட்டோம்னு யார் சொன்னா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X