சிஎஸ்கே தவறவிட்ட தங்கம்.. பந்தை தொட கூட முடியல.. கொத்தாக விக்கெட் எடுத்த தமிழக வீரர்

நெல்லை: டிஎன்பிஎல் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற முன்னாள் வீரர் சாய் கிஷோர் அசத்தி வருகிறார்.

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020ஆம் ஆண்ட 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

சாய் கிஷோர் ஏற்கனவே தனது திறமையை டிஎன்பிஎல், உள்ளூர் கிரிக்கெட் என அனைத்திலும் நிரூபித்துவிட்டார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால், சிஎஸ்கே அணி அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தராமல் பெஞ்சில் அமர வைத்து அழக பார்த்தது. இத்தனைக்கும் அந்த தொடரில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்த நிலையில், இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறி, தோனி உட்கார வைத்துவிட்டார். சரி, 2021ஆம் ஆண்ட சீசனிலாவது வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்த சாய் கிஷோருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

நல்ல காலம்

நல்ல காலம்

உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமை என்றால், வாய்ப்பு தராமல் ஒருவரை அலைக்கழிப்பது. அப்படி தான் சாய் கிஷோரை விளையாட அழைத்து வந்த சிஎஸ்கே, 2 ஆண்டுகள் வாய்ப்பு தராமல் நோக அடித்தது. 2022அம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சாய் கிஷோருக்கு நல்ல காலம் பிறந்தது.

குஜராத்தில் மோட்சம்

குஜராத்தில் மோட்சம்

குஜராத் அணி, சாய் கிஷோரை 3 கோடி ருபாய்க்கு ஏலத்தில் எடுத்து முக்கிய கட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கியது. இதில் சாய் கிஷோர் 5 போட்டியில் விளையாடி 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில், சாய் கிஷோர் டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் அணிக்காக விளையாடுகிறார்.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

நேற்றைய திருப்பூர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணி களமிறங்கியது. ஆனால், சாய் கிஷோரின் மாயஜால பந்துவீச்சை தொட முடியாத திருப்பூர் வீரர்கள் கதி கலங்கி ஆட்டமிழந்தனர். நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் திருப்பூர் அணி 73 ரன்களில் சுருண்டது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CSK EX Player Sai Kishore Brilliant bowling restrictrd tripur to 73 runs சிஎஸ்கே தவறவிட்ட தங்கம்.. பந்தை தொட கூட முடியல.. கொத்தாக விக்கெட் எடுத்த தமிழக வீரர்
Story first published: Saturday, July 23, 2022, 20:41 [IST]
Other articles published on Jul 23, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X