For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை அணிக்கு அநியாயம் பண்ணிட்டாங்க..!! கண் கலங்கிய ஸ்ரீனிவாசன்

சென்னை; ஐ.பி.எல். பட்டத்தை வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பேசும் போது கொஞ்சம் கண் கலங்கினார்.

சென்னை அணிக்கு பெயர் சூட்டியது எப்படி, தோனியை தேர்வு செய்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

என் கடைசி போட்டி சென்னையில் தான்- அடிச்சி சொன்ன தோனி..!!என் கடைசி போட்டி சென்னையில் தான்- அடிச்சி சொன்ன தோனி..!!

உத்தரவு

உத்தரவு

ஐ.பி.எல். முதல் சீசனுக்கான ஏலம் நடைபெற்ற போது, பலமான அணியையும், நல்ல தலைவனையும் உருவாக்க விரும்பினேன். இதற்காக ஏலத்தை கவனித்து கொண்டிந்த முன்னாள் வீரர் சந்திரேசகரை அழைத்து, நீங்க என்ன செய்வீங்கனு தெரியாது, எனக்கு தோனியை நம்ம அணியில் எடுத்தே ஆகனும் என்று கூறியதாக ஸ்ரீனிவாசன் நிகழ்ச்சியில் பேசினார்.

பெயர் வந்தது எப்படி?

பெயர் வந்தது எப்படி?

சென்னை அணியை வாங்கிய பிறகு ஒரு நல்ல பெயரை சூட்ட வேண்டும் என்று நினைத்ததாக கூறினார்.அப்போது ஸ்ரீகாந்த் தான், குலுக்கல் முறையில் சீட்டு எழுதிப் போட்டு பெயரை எழுதியதாகவும், அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரையே அதிக முறை வந்தது, இதனாலேயே அந்த பெயரை வைத்து விட்டோம் என்றார்( சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்ற பெயர் ஏற்கனவே. ஐ.சி.எல். தொடரில் இருந்தது, அதனால் அந்த பெயரை வைக்கவில்லை என்பது கூடுதல் தகவல்)

கண் கலங்கினார்

கண் கலங்கினார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுக்காலம் தடை விதித்தது குறித்தும் ஸ்ரீனிவாசன் பேசினார். தவறே செய்யாமல் இருந்த சென்னை அணிக்கு அநியாயம் நிகழ்ந்ததுவிட்டதாக கூறிய ஸ்ரீனிவாசன், அது ஒரு பெரிய விவகாரம், அதை பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். தடைக்கு பிறகு சென்னை அணி வீரர்களுக்கு ஒரு சிறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். அப்போது தோனி முதல் முறையாக கண் கலங்கி அழுததை தாம் பார்த்தேன் என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார். அந்த வருடம் சென்னை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அணி வீரர்களுடன் பேசிய தோனி, சொன்னதை செய்து காட்டிவிட்டார் என்று கூறினார்

நல்ல கேப்டன்

நல்ல கேப்டன்

தோனி போல் ஒரு கேப்டன் இனியும் கிடைக்க மாட்டார். ஒரு வீரரை பார்த்த உடன் தோனி கூறிவிடுவார், இவர் நமது அணிக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கணித்துவிடுவார்.. அவர் கூறியது எப்போதும் சரியாகவே அமையும், சாதாரண வீரர்களை கூட அசாதாரணமாக மாற்றும் திறமை தோனியிடம் உள்ளது. நெருக்கடியான நிலையில் தோனி எப்போதும் அமைதி காப்பார். தோனி ஓய்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்பதே தவறு என்றும் ஸ்ரீனிவாசன் பேசினார்.

Story first published: Saturday, November 20, 2021, 20:49 [IST]
Other articles published on Nov 20, 2021
English summary
CSK owner Srinivasan talks about CSK ban and recalls How he selected Dhoni for Chennai team. CM stalin attended the celebration Function
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X