For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீ தோத்துட்டன்னு உலகமே சொன்னாலும் உன்ன நான் நம்புவேன்... நீ நண்பேன்டா.. தோனிக்கு மெசேஜ் சொன்ன அவர்

Recommended Video

IPL 2019:Chennai vs Punjab | Harbhajan tweets | தோனி அணிக்காக அதை செஞ்சுட்டே இருப்பேன்: ஹர்பஜன்

மும்பை:தோனி என் நண்பன் என்று சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங்.. உருகி, உருகி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி உள்ளது.

ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகளுக்கு எப்பவுமே மவுசு தான். அவர்கள் என்ன செய்கிறார்கள்... யாரிடம் பேசுகிறார்கள் என வைரல் தான்.

அத்தகைய கேட்டகரியில் இருக்கும் ஒரு நபர் ஹர்பஜன் சிங்.. அவர் தமிழில் எழுதும் டுவிட்டர் பதிவுகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதை படித்து சிலாகித்து ரி டுவீட் பண்ணும் ரசிகர்களும் உள்ளனர்.

முதல் பந்தில் டேவிட் வார்னர் அவுட்.. 11 ஆண்டு சாதனை முறியடிப்பு! அடுத்தடுத்து மிரட்டிய அறிமுக வீரர்! முதல் பந்தில் டேவிட் வார்னர் அவுட்.. 11 ஆண்டு சாதனை முறியடிப்பு! அடுத்தடுத்து மிரட்டிய அறிமுக வீரர்!

டுவிட்டர் பிரபலம்

டுவிட்டர் பிரபலம்

தற்போது சென்னை அணியில் உள்ள அவர்... தோனியின் செல்லப்பிள்ளை.. சூப்பர் நண்பன் ... இது அனைவருக்கும் தெரியும். ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியில் இணைந்த பிறகு அவரது டுவிட்டர்கள் ஏக பிரபலம்.

கடும் விமர்சனங்கள்

கடும் விமர்சனங்கள்

அந்த பதிவுகள் பற்றி எதிர்மறையான கருத்துகள் இருந்து வருகின்றன. யாரோ அவருக்கு கதை,வசனம் எழுதி தருகின்றனர் என்ற விமர்சனங்கள் பொது வெளியில் பேசப்பட்டு வந்தன. இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து தமது டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

டுவிட்டர் மெசேஜ்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு.... தல தோனிக்கு அவர் நன்றி சொன்ன மெசேஜ் தான் தற்போது டாப். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல உன்ன மட்டும் தான்.நான் என்ன நம்புனேன் அத தாண்டி என் நண்பன் @msdhoni @ChennaiIPL @CSKFansOfficial என்ன நம்புறாங்க அதுக்கு கைமாறா வெற்றி ஓரம்கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும் சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி #CSKvKXIP" என்று ட்வீட் செய்துள்ளார்.

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணியில் ஹர்பஜன் சிங் எடுத்த விக்கெட்டுகளுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் தல தோனி. ஏன் எனில் அந்த போட்டியில் சென்னை அணி குறைவான ரன்களையே வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

ஆனால் தோனியின் ஆலோசனையுடன் ஹர்பஜன் சிங், கிறிஸ் கெய்லை வீழ்த்தினார். அந்த போட்டியில் மொத்தம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

Story first published: Sunday, April 7, 2019, 12:49 [IST]
Other articles published on Apr 7, 2019
English summary
Dhoni is my friend, says Csk player Harbhajan Singh in twitter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X