For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தை சேதப்படுத்தியதால் விளையாட தடை விதிக்கப்பட்ட வார்னர் என்ன செய்தார் தெரியுமா?

பந்தை சேதப்படுத்தியதால் ஓராண்டு விளையாட ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ள அவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Recommended Video

வார்னர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா ?

டெல்லி: கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்டால் என்னவாகும். ஆஸ்திரேலிய கிரி்க்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னருக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் கடந்த மாதம் நடந்தது. இதில், பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னருக்கு தலா ஓராண்டுகள் சர்வதேசப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

David Warner now in a new controversy

அதையடுத்து ஆஸ்திரேலிய அணியில் இருந்து இவர்கள் நீக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டது.

ஓராண்டுக்கு எந்தப் போட்டியிலும் விளையாட முடியாது என்ற நிலையில், உடல் தகுதியை இழந்து விடக் கூடாது என்பதற்காகவும், பொழுது போவதற்காகவும், சிட்னியில் தான் கட்டி வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளில் வார்னர் ஈடுபட்டுள்ளார். அவருடன் அவருடைய குழந்தைகளும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் படங்கள் சமூகதளங்களில் வெளியாகியுள்ளன. வார்னருக்கு பாராட்டுகளும் குவிந்துள்ளன. இந்த நிலையில், வார்னர் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதா படம் எடுத்து புகைப்படக்காரர் ஒருவரை, வார்னரின் உறவினர் ஒருவர் தாக்கியுள்ளார். அந்த போட்டோகிராபரின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார். அந்த போட்டோகிராபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தலைவலி போய் திருகுவலி வந்ததுபோல், இதென்னடா நமக்கு வந்த சோதனை என்று, வார்னர் புலம்பி வருகிறார்.

Story first published: Tuesday, April 24, 2018, 16:23 [IST]
Other articles published on Apr 24, 2018
English summary
Suspended Australian cricketer David Warner now in a new controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X