For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெண்டாவது போட்டியிலயும் டேவிட் வார்னர் விளையாட முடியாது... சிக்கலில் ஆஸ்திரேலிய அணி

மெல்போர்ன் : காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான கடந்த பகலிரவு போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் சிட்னியில் சிகிச்சை பெற்றுவந்த அவர் அங்கு பரவிவரும் கொரோனா காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மெல்போர்னுக்கு போயிட்டோமுங்கோ... ஜடேஜா, குல்தீப் கூல் செல்பி!மெல்போர்னுக்கு போயிட்டோமுங்கோ... ஜடேஜா, குல்தீப் கூல் செல்பி!

இதனிடையே, அவர் தன்னுடைய காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்றும் இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வார்னர் பங்கேற்க மாட்டார் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

2வது போட்டி 26ல் துவக்கம்

2வது போட்டி 26ல் துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது இறுதியாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. குறைந்த ஓவர்களின் போட்டிகளின்போது காயம் அடைந்த டேவிட் வார்னர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

பங்கேற்காத வார்னர்

பங்கேற்காத வார்னர்

காயம் காரணமாக கடந்த 17ம் தேதி துவங்கிய இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை. இதையடுத்து சிட்னியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்றுவந்த வார்னர், அங்கு பரவிவரும் கொரோனாவை அடுத்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

2வது போட்டியில் பங்கேற்க மாட்டார்

2வது போட்டியில் பங்கேற்க மாட்டார்

இந்நிலையில் அவரது காயம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்றும் அதனால் அவர் இந்தியாவிற்கு எதிராக வரும் சனிக்கிழமை மெல்போர்னில் துவங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதேபோல பௌலர் ஷீன் அபாட்டும் 2வது போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பு சாத்தியமில்லை

பங்கேற்பு சாத்தியமில்லை

மேலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பயோ செக்யூர் விதிமுறைகளின்படியும் இவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 23, 2020, 11:27 [IST]
Other articles published on Dec 23, 2020
English summary
David Warner and Sean Abbott will rejoin our Aussie men's squad ahead of the third Vodafone Test -CA
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X