For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோத்தாலும் கெத்து காட்டிய டேவிட் மலான்...டி20 போட்டிகள்ல சிறப்பான சாதனை!

அகமதாபாத் :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரை இந்தியா 3க்கு 2 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் நேற்றைய தினம் இங்கிலாந்து தோற்ற போதிலும் அணியின் டேவிட் மலான், 46 பநதுகளில் 68 ரன்களை குவித்திருந்தார்.

இவர்களுக்கு மட்டும் முக்கிய விதிவிலக்கு.... உற்சாகத்தில் ஐபிஎல் வீரர்கள்...பிசிசிஐ-ன் முடிவு சரியா? இவர்களுக்கு மட்டும் முக்கிய விதிவிலக்கு.... உற்சாகத்தில் ஐபிஎல் வீரர்கள்...பிசிசிஐ-ன் முடிவு சரியா?

இந்நிலையில் சர்வதே டி20 போட்டிகளில் அதிவேக 1000 ரன்களை குவித்துள்ள முதல் வீரர் என்ற பெருமை நேற்றைய போட்டியின்மூலம் மலானுக்கு கிடைத்துள்ளது.

இந்தியா தொடர் வெற்றி

இந்தியா தொடர் வெற்றி

இந்தியா மற்றும் இங்கலாந்து இடையிலான டி20 போட்டித் தொடர் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. ஆயினும் டி20 தொடரில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இங்கிலாந்து ஆளுமை

இங்கிலாந்து ஆளுமை

5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தியது. நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 224 ரன்கள் என்ற கடுமையான இலக்கை கொடுத்த நிலையிலும் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

மலான் 1000 ரன்கள் சாதனை

மலான் 1000 ரன்கள் சாதனை

குறிப்பாக ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மலான் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். மலான் 46 பந்துகளில் 68 ரன்களை குவித்து ஷர்துல் தாக்கூர் பந்தில் போல்ட் ஆனார். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் டி20 போட்டிகளில் அதிவேக 1000 ரன்கள் சாதனையையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

முறியடித்த மலான்

முறியடித்த மலான்

24 இன்னிங்ஸ்களில் விளையாடி அவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் 26 இன்னிங்ஸ்களில் அதிவேக 1000 ரன்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் மற்றும் கேஎல் ராகுல் உள்ளனர்.

Story first published: Sunday, March 21, 2021, 13:52 [IST]
Other articles published on Mar 21, 2021
English summary
Malan touched the milestone figure during the fifth T20I against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X