For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொத்தம் 6 டீம் சூப்பரா விளையாடுது.. உலக கோப்பையை யாரு ஜெயிப்பாங்கனு தெரியல

மும்பை: உலக கோப்பையில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று கணிப்பது கடினமாக இருப்பதாக டி வில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

மே 30ம் தேதி தொடங்கும் உலக கோப்பை தொடரில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த முறை இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்று தான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வேகப்பந்து வீச்சிலும் சரி, ஸ்பின் பவுலிங்கிலும் சரி... இந்திய அணி திறம்பட உள்ளது. அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக இருக்கிறது.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

அதேபோல மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் அற்புதமாக ஆடிவருகிறது. நடப்பு உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்பது முன்னாள் வீரர்களின் கருத்து.

ஆஸ்திரேலியா சாம்பியன்

ஆஸ்திரேலியா சாம்பியன்

ஸ்மித், வார்னர் வரவால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சிறந்த அணிகளாகவே தெரிகின்றன.

சாம்பியன் டிராபி

சாம்பியன் டிராபி

இந்நிலையில், உலக கோப்பை குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், இந்திய அணி 2013லும் பாகிஸ்தான் அணி 2017ம் ஆண்டிலும் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றன. ஆஸ்திரேலியா நிறைய முறை உலக கோப்பையை வென்றுள்ளது.

சொந்த மண்ணில் போட்டி

சொந்த மண்ணில் போட்டி

இங்கிலாந்து அணி இந்த முறை சொந்த மண்ணில் ஆடுவதால் அந்த அணிக்கும் வாய்ப்புள்ளது. நியூசிலாந்து எப்போதுமே உலக கோப்பையில் அருமையாக ஆடும். தென் ஆப்ரிக்க அணியில் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது.

6 அணிகள் வெல்லும்

6 அணிகள் வெல்லும்

எனவே இந்த 6 அணிகளுமே உலக கோப்பையை பெற தகுதியான மற்றும் வாய்ப்புகள் உள்ள அணிகளாகும். ஆகையால், ஏதாவது ஒரு அணியை தேர்வு செய்வது என்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 28, 2019, 18:26 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
De Villiers has stated that it is difficult to predict which team to capture the trophy in the World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X