For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓய்வு பெற போகிறேன்.. பிவி சிந்து அதிர்ச்சி டிவிட்.. கடைசியில் பார்த்தா மேட்டரே வேற.. என்ன நடந்தது?

துபாய்: டென்மார்க் பேட்மின்டன் ஓபன் தொடரில் ஆட முடியாதது குறித்து பிவி சிந்து உருக்கமான டிவிட் ஒன்றை செய்துள்ளார். ஆனால் இந்த டிவிட் அவரின் ஓய்வு குறித்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணிக்காக பேட்மின்டன் போட்டிகளில் ஆடி வரும் பிவி சிந்து உலகம் முழுக்க பிரபலமானவர். சர்வதேச அளவில் பேட்மின்டன் பெண்கள் பிரிவில் இவர் சில வருடத்திற்கு முன் முதல் இடம் கூட பிடித்து இருந்தார்.

தற்போது சர்வதேச அளவில் 6வது இடத்தில் இருக்கும் சிந்து, பேட்மின்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இவர் செய்த டிவிட் ஒன்றுதான் இந்த சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது.

என்ன போஸ்ட்

என்ன போஸ்ட்

பிவி சிந்து செய்துள்ள டிவிட்டர் போஸ்டில்.. டென்மார்க் ஓபன் போட்டிதான் இறுதி.. நான் ஓய்வு பெறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட்டை பார்த்து பலரும் அவர் சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்று தவறாக நினைத்து உள்ளனர். ஆனால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை பிவி சிந்து எடுக்கவில்லை.

கடிதம்

கடிதம்

இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில்.. கடந்த சில நாட்களாக நான் என் மனதில் எழும் உணர்வுகளுடன் போராடி வருகிறேன். எனக்கு தவறான எண்ணங்கள், உணர்வுகள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால்தான் நான் இன்று இதை எழுதுகிறேன். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை உணர்த்த இதை எழுதுகிறேன்.

ஆதரவு

ஆதரவு

இதை படிக்கும் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் என்று தெரியும். ஆனால் இதை படித்து முடிக்கும் போது என்னுடைய எண்ணமும், முடிவும் சரிதான் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த கொரோனா பெருந்தொற்று என் கண்ணை திறந்துவிட்டது. எனக்கு எதிரில் இருக்கும் எதிரணி வீரர்களை என்னால் எளிதாக வீழ்த்த முடியும்.

வீழ்த்த முடியும்

வீழ்த்த முடியும்

ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இந்த வைரஸை எப்படி வீழ்த்த முடியும் என்று தெரியவில்லை. இணையத்தில் இது தொடர்பாக நான் படிக்கும் செய்திகள் இதயத்தை உலுக்கும் வகையில் இருக்கிறது. கொரோனா காரணமாக மக்கள் படும் கஷ்டங்களை படித்து வருகிறேன். இப்போது என்னால் டென்மார்க் பேட்மின்டன் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை.. இதுதான் கடைசி.

ஓய்வு பெறுகிறேன்

ஓய்வு பெறுகிறேன்

என்னை மோசமான எண்ணங்கள், எதிர்மறை விஷயங்கள் சூழ்ந்து இருக்கிறது. இந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து நான் ஓய்வு பெற விரும்புகிறேன். இன்றோடு நான் எதிர்மறை எண்ணங்கள், அச்சங்கள், நிலையற்ற தன்மைகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன். அதேபோல் தூய்மையில்லாத பழக்க வழக்கங்களில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

தூய்மை

தூய்மை

அசுத்தமான செயல்களில் இருந்து ஓய்வு பெற போகிறேன். உங்களுக்கு நான் சின்ன ஹார்ட் அட்டாக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இப்படி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க் போட்டி நடக்கவில்லை. அதற்கு பதிலாக நான் கண்டிப்பாக ஆசிய பேட்மிண்டன் போட்டிகளில் ஆடுவேன். நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த கடிதம் மூலம்.. ஓய்வு பெறுவது போல சர்ச்சையை உருவாக்கி அதன் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை பிவி சிந்து ஏற்படுத்தி உள்ளார். மக்கள் தூய்மையாக இருக்க வேண்டும், உடல் மற்றும் மன நலத்தை பேண வேண்டும் என்று இந்த கடிதம் மூலம் சிந்து குறிப்பிட்டு உள்ளார். இதை படித்த பலர்.. சிந்து ஓய்வு பெற்றுவிட்டாரோ என்று ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.ஆனால் இவர் விழிப்புணர்வுக்காக இப்படி டிவிட் செய்துள்ளார்.

என்ன சொல்கிறார்கள்

என்ன சொல்கிறார்கள்

பிவி சிந்துவின் இந்த டிவிட்டிற்கு பலர்.. நீங்கள் தோனியை போல பேசி உள்ளீர்கள். தோனி இப்படித்தான் எல்லோருக்கும் தன்னுடைய டி ஷர்டை கொடுத்து பீதியை ஏற்படுத்தினார்... ஆனால் கடைசியில் நான் ஓய்வு பெறவில்லை என்று கூறினார். ஐபிஎல் உலகமே இவரின் முடிவால் ஆடிப்போனது.தற்போது நீங்களும் அதேபோல் ஓய்வு பெறுவது போல பீதியை கிளப்பி .. கடைசியில் இல்லை என்று மறுத்துள்ளீர்கள்.. என்று கமெண்ட் செய்துள்ளனர்.

Story first published: Monday, November 2, 2020, 16:52 [IST]
Other articles published on Nov 2, 2020
English summary
Definitely Not: P V Sindhu pulls up a Dhoni with her sarcastic retirement post
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X