For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

21 ரன்கள்... என்ன தவான் மறுபடியுமா? உலக கோப்பையில் விளையாட மாட்டீங்க போல... கடுப்பில் ரசிகர்கள்

மும்பை:தொடக்க வீரராக களமிறங்கி வரும் தவான், கடந்த 15 இன்னிங்சிலும் போதிய ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்து பார்மில் இல்லாதது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு அணியின் தொடக்க ஆட்டம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆட்டத்தின் போக்கை ஓரளவு யூகிக்க முடியும் என்பதால் தொடக்க ஜோடியின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்க முடியும்.

இந்தியாவை பொறுத்தவரை சுனில் கவாஸ்கர் காலத்தில் இருந்து வீரேந்திர சேவாக் வரை என்ற காலம் உண்டு. அதன்பிறகு... ரோகித் சர்மாவும், தவானும் தொடக்க வீரர்களாக ஜோடி சேர்ந்தது மற்றொரு காலமாகும்.

அடுத்த ஆளு உள்ள வாங்க! லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை வாரிக் கொடுக்கும் அம்பதி ராயுடு!! அடுத்த ஆளு உள்ள வாங்க! லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை வாரிக் கொடுக்கும் அம்பதி ராயுடு!!

இந்தியாவின் துவக்க ஜோடி

இந்தியாவின் துவக்க ஜோடி

இப்போது வரையிலும் இந்த ஜோடி தான்... இந்திய அணியின் துவக்க ஜோடியாக உள்ளது. 2013ம் ஆண்டு முதல் தொடக்க ஜோடியான இவர்கள் மொத்தம் 82 ஆட்டங்களில் களமிறங்கி 3846 ரன்களை சேர்த்திருக்கின்றனர். சராசரி 47.80.

வெற்றி சதவீதம்

வெற்றி சதவீதம்

அதிலும் பரம வைரியான பாகிஸ்தானுக்கு எதிரான 210 ரன்கள் மறக்க முடியாதது. இருவரும் இணைந்தே 13 சதங்கள், 12 அரை சதங்களை கடந்துள்ளனர்.

ராசியான துவக்க ஜோடி

ராசியான துவக்க ஜோடி

சச்சின், சேவாக்குக்கு பிறகு சிறந்த வெற்றிகரமான தொடக்க ஜோடி என்ற பெயர் ரோகித், தவான் ஆகியோருக்கு உண்டு. ஆனால்... சமீபகாலமாக இந்த ஜோடிக்கு நேரம் சரியில்லை போலும்.

அதிருப்தியில் ரசிகர்கள்

அதிருப்தியில் ரசிகர்கள்

வெற்றிகரமான ஜோடி என்று ரசிகர்களால் பெருமைக்கு ஆளான இந்த ஜோடி.. சமீப காலமாக கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் தவானின் அண்மைக்கால டிராக் ரிக்கார்டை பார்த்தால் கிரிக்கெட் ரசிகர்கள் அர்ச்சிக்காத குறைதான்.

தவானின் சராசரி

தவானின் சராசரி

4, 29, 35 என கடந்த 15 இன்னிங்சிலும் சேர்த்த மொத்த ரன்கள் 376. சராசரி 26.85. அதிலும் இந்த ஆஸ்திரேலியா தொடரிலாவது சோபிப்பார் என்று பார்த்தால் முதல் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

21 ரன்கள் போதாது

21 ரன்கள் போதாது

நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் அடிச்ச மொத்த ரன்னே 21. அதிலும் கடந்த 12 மாதங்களில் ஆப் ஸ்பின் பவுலிங்கில் அவர் விளையாடி பெற்ற மொத்த சராசரி 20.20 தான். இது அவரது கிரிக்கெட் வரலாற்றில் பெற்றிருக்கும் மிக மோசமான டிராக் ரெக்கார்டு.

ஆஸி. தொடர்

ஆஸி. தொடர்

இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணிக்கு உலக கோப்பை தொடர் உள்ளது. அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் உலக கோப்பை தொடருக்கான முன்னோட்டம் தான் ஆஸ்திரேலியா தொடர்.

சொதப்பல் தொடருமா?

சொதப்பல் தொடருமா?

இந்த தொடரில் நன்றாக ஆடி பார்முக்கு வந்தால் தான்... உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். தவானின் இந்த சொதப்பல் ஆட்டம் தொடர்ந்தால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து புறந்தள்ளப்படுவார் என்பது உறுதி.

Story first published: Tuesday, March 5, 2019, 16:45 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
Dhawan who has been the opening batsman, has lost in the last 15 innings without getting enough runs, has provoked a huge disappointment among fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X