For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகிலேயே அதிக விலை கிரிக்கெட் பேட் இது தான்.. அதிர வைத்த தோனியின் உலகக்கோப்பை பைனல் பேட்!

மும்பை : தோனியின் கிரிக்கெட் பேட் கின்னஸ் உலக சாதனை செய்து வியக்க வைத்துள்ளது.

Recommended Video

உலகிலேயே அதிக விலை கிரிக்கெட் பேட் இது தான் | Dhoni's bat auctioned for Rs.83 | World Record

உலகிலேயே அதிக விலை கொண்ட கிரிக்கெட் பேட் என்ற பெயரை பெற்றுள்ளது.

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிக்கான கடைசி ரன்களை எடுத்த அந்த தோனியின் பேட் தான் இந்த சாதனையை செய்துள்ளது.

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை எந்த இந்தியராலும் மறக்க முடியாது. 1983க்கு பின் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்றது இந்திய அணி. கேப்டன் தோனி தலைமையில் அந்த சாதனை நிகழ்வு நடந்தது. அதிலும் இறுதிப் போட்டியில் தோனி கடைசி வரை களத்தில் நின்று ஆடினார்.

வெற்றி தேடித் தந்த பேட்

வெற்றி தேடித் தந்த பேட்

கடைசி ரன்களை தோனி தான் எடுத்தார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை, நோக்கி இந்தியா சேஸிங் செய்தது. தோனி தன் பேட்டிங் வரிசையை மாற்றி நான்காம் வரிசையில் களமிறங்கினார்.

அந்த சிக்ஸர்

அந்த சிக்ஸர்

இறுதிப் போட்டியின் கடைசி வெற்றி ரன்களை சிக்ஸர் மூலம் எடுத்தார் தோனி. அது ரசிகர்களால் மறக்க முடியாத சிக்ஸர். அதுவரை தோனி மீது இருந்த விருப்பம், அன்பு அதன் பின்பு தான் வெறியாக பல ரசிகர்களுக்கு மாறியது.

ஏலத்தில் விட்ட தோனி

ஏலத்தில் விட்ட தோனி

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி ரன்களை எடுத்த அந்த கிரிக்கெட் பேட்டை தான் தோனி ஏலத்தில் விட்டார். அவரது மனைவி சாக்ஷியின் பெயரில் இயங்கி வரும் சாக்ஷி பவுண்டேஷனுக்கு நிதி திரட்டும் வகையில் ஏலத்தில் விட்டார்.

அதன் விலை என்ன?

அதன் விலை என்ன?

அந்த பேட்டின் உண்மையான விலை ரூ.4,000 முதல் 5,000 வரை இருக்கலாம். அந்த பேட் ஏலத்தில் சில லட்சங்கள் வரை விலை போகும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போய் வியக்க வைத்துள்ளது அந்த பேட்.

சாதனை செய்த பேட்

சாதனை செய்த பேட்

ஏலத்தில் ரூ.83 லட்சத்திற்கு தோனியின் கிரிக்கெட் பேட் விற்கப்பட்டது. ஆர்கே குளோபல் ஷேர் அண்ட் செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனம் அந்த பேட்டை ஏலத்தில் எடுத்தது. உலகில் எந்த கிரிக்கெட் பேட்டும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை.

நல்ல காரியம்

நல்ல காரியம்

இந்த கிரிக்கெட் பேட் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. நல்ல காரியத்துக்காக ஏலம் விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தோனியின் சாதாரண கிரிக்கெட் பேட்டாக இருந்தாலும் கூட இத்தனை விலை போயிருக்காது. ஆனால், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி பேட் என்பதால் கூடுதல் மதிப்பை பெற்றுள்ளது.

தோனியின் மதிப்பு

தோனியின் மதிப்பு

தோனி இனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவாரா? என்பது தெரியவில்லை. ஆனால் அவரது மதிப்பு மட்டும் தினமும் உயர்ந்து வருகிறது. இணையத்தில் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை. விளம்பரங்களிலும் தோனியின் மதிப்பு சரியவில்லை.

ஐபிஎல்-இல் தோனி

ஐபிஎல்-இல் தோனி

தோனி அடுத்து 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார். அந்த தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப சிறிய வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதற்காகவே தோனி ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Story first published: Thursday, March 5, 2020, 20:05 [IST]
Other articles published on Mar 5, 2020
English summary
Dhoni bat did a Guinness World record, after it was auctioned for Rs.83 lakhs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X