For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன வேணா தர்றேன்.. தயவுசெஞ்சு அது மட்டும் வேணாம்.. கெஞ்சிய தோனி.. ஹெய்டன் சொன்ன ரகசியம்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேத்யூ ஹெய்டன் ஆடிய போது, கேப்டன் தோனி அவரிடம் மங்கூஸ் பேட்டை பயன்படுத்த வேண்டாம் என கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தகவலை சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அளித்த பேட்டியில் மேத்யூ ஹெய்டன் கூறி உள்ளார்.

தோனி அப்போது என்ன கூறினார் என்பது பற்றியும் அவர் நினைவு கூர்ந்துள்ளார் மேத்யூ ஹெய்டன்.

டி20 அணிக்கு அந்த இளம் வீரர் கேப்டன்.. டெஸ்ட்டுக்கு மட்டும் கோலி.. பிசிசிஐ அதிரடி.. கசிந்த தகவல்டி20 அணிக்கு அந்த இளம் வீரர் கேப்டன்.. டெஸ்ட்டுக்கு மட்டும் கோலி.. பிசிசிஐ அதிரடி.. கசிந்த தகவல்

ஐபிஎல்-இல் மேத்யூ ஹெய்டன்

ஐபிஎல்-இல் மேத்யூ ஹெய்டன்

ஐபிஎல் தொடரில் மேத்யூ ஹெய்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக முதல் சில சீசன்களில் பட்டையைக் கிளப்பினார். அவரது அதிரடி ஆட்டம் ஒருபுறம் இருக்க ஒரு பேட்டை வைத்து கிரிக்கெட் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

மங்கூஸ் பேட்

மங்கூஸ் பேட்

அந்த கிரிக்கெட் பேட் தான் மங்கூஸ் பேட். பேஸ்பால் பேட் - கிரிக்கெட் பேட் இரண்டையும் சேர்த்து செய்தது போல இருந்த அந்த மங்கூஸ் பேட்டுடன் ஹெய்டன் வலைப் பயிற்சி செய்த போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் பின் அதை வைத்துக் கொண்டு அதிரடி ஆட்டமும் ஆடினார்.

2010இல் பிரபலமான பேட்

2010இல் பிரபலமான பேட்

2010 ஐபிஎல் சீசனில் தான் மேத்யூ ஹெய்டன் முதன் முறையாக மங்கூஸ் பேட்டுடன் சிஎஸ்கே அணிக்காக ஆடினார். அதற்கு முன் கிரிக்கெட் உலகம் அப்படி ஒரு வித்தியாசமான கிரிக்கெட் பேட்டை பார்த்ததில்லை. அந்த பேட் சர்வதேச போட்டிகளில் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி இருக்கும் அந்த பேட்?

எப்படி இருக்கும் அந்த பேட்?

நீளமான கைப்பிடியும், பந்தை அடிக்க பயன்படும் பகுதி சிறியதாகவும் இருக்கும். இதன் மூலம், கீழ்ப் பகுதியில் எடை அதிகமாக இருக்கும். அதனால், பந்து அந்த பகுதியில் படும் போது அதிக வேகத்தில் பறக்கும். அதே சமயம், பந்தை தாக்கும் பகுதி சிறியது என்பதால், பந்து பேட்டில் படாமலோ, எட்ஜ் ஆகவோ கூட அதிக வாய்ப்பு இருந்தது.

ஹெய்டன் சொன்ன தகவல்

ஹெய்டன் சொன்ன தகவல்

இந்த பேட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாலும், சிஎஸ்கே அணியின் வீரர்களே இதை அதிகம் விரும்பவில்லை. குறிப்பாக கேப்டன் தோனி இதை பயன்படுத்த வேண்டாம் என தன்னிடம் கேட்டுக் கொண்டதாக மேத்யூ ஹெய்டன் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த பேட் மட்டும் வேணாம்

இந்த பேட் மட்டும் வேணாம்

"வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். நான் தருகிறேன். ஆனால், இந்த பேட்டை மட்டும் பயன்படுத்த வேண்டாம்" என தோனி ஒருமுறை ஹெய்டனிடம் கேட்டுக் கொண்டாராம். அப்படி என்றால் எந்த அளவுக்கு தோனி இந்த பேட் மீது நம்பிக்கை இன்றி இருந்திருப்பார்.

பயிற்சி செய்தேன்

பயிற்சி செய்தேன்

எனினும், தான் இந்த பேட்டை சுமார் ஒன்றரை வருட பயிற்சிக்கு பின்னரே பயன்படுத்தியதாகவும், பேட் பகுதியில் பந்து பட்டால் கூடுதலாக 20 மீட்டர் தூரம் பந்து செல்லும் என்றும் கூறினார் ஹெய்டன். அணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் போதிய பயிற்சியுடன் தான் இந்த பேட்டை பயன்படுத்தியதாக கூறினார்.

ரெய்னாவுக்கு பிடித்த இன்னிங்க்ஸ்

ரெய்னாவுக்கு பிடித்த இன்னிங்க்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா முன்பு ஒரு பேட்டியில் கூறுகையில், 2010ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மங்கூஸ் பேட்டில் ஹெய்டன் அடித்த 93 ரன்கள் தான் தனக்கு பிடித்த இன்னிங்க்ஸ் என கூறி இருந்தார்.

Story first published: Saturday, May 9, 2020, 17:07 [IST]
Other articles published on May 9, 2020
English summary
Dhoni don’t like Mongoose bat says Matthew Hayden. Hayden used to play with that bat back in 2010 IPL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X