For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்போ ரிட்டையர்டு ஆவேன்னு தோனி ஏற்கனவே சொல்லிட்டாரு..! குண்டை தூக்கி போட்ட அவர்

மும்பை: தமது ஓய்வு குறித்த திட்டத்தை தோனி, ஏற்கனவே பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார் என்று முனாப் பட்டேல் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. ஐசிசியின் 3 வகையான கோப்பைகளை வென்ற அவர் சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் ஓய்வு குறித்து தோனி இன்னும் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து மட்டும் விலகுவதாக கூறி, 2 மாதத்திற்கு ராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெற இருக்கிறார்.

ஏற்கனவே முடிவு

ஏற்கனவே முடிவு

அவர் தமது ஓய்வு பற்றி முன்பே முடிவெடுத்துவிட்டார். ஆனால் கோலியின் வேண்டுகோளுக்கு இணங்க தமது முடிவை 2 மாதங்கள் தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு, ராணுவத்துக்கு சென்றிருக்கிறார் என்று கிரிக்கெட் வட்டார தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.

புதிய தகவல்

புதிய தகவல்

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முனாப் பட்டேல், தோனியின் ஓய்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: தோனி தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருப்பார். அது குறித்து ஏற்கனவே அவர் பிசிசிஐயிடம் தெரிவித்து இருப்பார்.

நன்றாகவே தெரியும்

நன்றாகவே தெரியும்

அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். யாரும் ஆலோசனை வழங்க தேவை இல்லை. அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து பிசிசிஐயிடம் நிச்சயமாக தனது முடிவை தெரிவித்திருப்பார்.

தோனி சாதனைகள்

தோனி சாதனைகள்

எனவே தோனியின் ஓய்வு குறித்து அவரை யாரும் எதுவும் தொந்தரவு செய்ய வேண்டாம். 1975ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி செய்த சாதனைகளை தோனி 2007 முதல் 2015ம் ஆண்டுகளிலேயே செய்து முடித்து விட்டார்.

அனைத்து விதமான கோப்பை

அனைத்து விதமான கோப்பை

அவர் அனைத்து கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்று தந்து விட்டார். இனியும் சாதிப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்வேன். அவர் மாதிரியான ஒரு வீரரை இந்திய அணியில் இருந்து எளிதில் தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.

Story first published: Wednesday, July 24, 2019, 18:56 [IST]
Other articles published on Jul 24, 2019
English summary
Dhoni knows when he have to retire says former player munaf patel.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X