For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆகஸ்ட் 15..! காத்திருக்கும் தல தோனி.. நடக்குமா அந்த காரியம்...!! திக், திக், சஸ்பென்ஸ்

டெல்லி: வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று லடாக்கில் நடைபெறும் சுதந்தர தின விழாவில், தோனி இந்திய தேசிய கொடி ஏற்றுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, ஜூலை 31 முதல் ராணுவத்தில் சேர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு, காஷ்மீரில் சக வீரர்களுடன் இணைந்து தற்போது அவர் ரோந்து பணிகளை மேற் கொண்டுள்ளார். அந்த பணிகள் முடிந்து ஆகஸ்ட் 15ம் தேதியுடன் வீடு திரும்ப இருக்கிறார்.

லடாக் பிரதேசம்

லடாக் பிரதேசம்

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய யூனியன் பிரதேசமாக உருவாகவுள்ள லடாக்கில் தோனி, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திர தினவிழா

சுதந்திர தினவிழா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. புதிய யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட லடாக்கில் லே நகரில், வரும் 15ம் தேதியன்று சுதந்திர தின விழா கொண்டாடப் படுகிறது.

கொடியேற்றும் தோனி

கொடியேற்றும் தோனி

அந்த நிகழ்ச்சியில் மகேந்திரசிங் தோனி தேசிய கொடி ஏற்றுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீனியர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: தோனி இந்திய ராணுவத்தின் சிறந்த அம்பாசிடர். அவர் ராணுவ வீரர்களை ஊக்குவிக்கிறார்.

மகிழ்ச்சியான விஷயம்

மகிழ்ச்சியான விஷயம்

தவிர, வீரர்களுடன் கால்பந்து, வாலிப ல் உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளையாடி வருகிறார். ஆகஸ்ட் 15 வரை தோனி ராணுவ வீரர்களுடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்றார்.

வெளியாகாத தகவல்

வெளியாகாத தகவல்

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் லடாக்கின் எந்த பகுதியில் கொடியேற்ற உள்ளார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் தோனி தேசிய கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சியில், லடாக் தொகுதி பாஜக எம்பி ஜம்யாங் செரிங்கும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, August 11, 2019, 11:15 [IST]
Other articles published on Aug 11, 2019
English summary
Dhoni likely to hoist tri color in leh on independence day, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X