என்னதான் "பிரிட்டிஷ் இங்கிலீஷில்" டியூஷன் எடுத்தாலும்... "ஜார்க்கண்ட் இந்தி"தான் ஒர்க் அவுட் ஆகுது!

Posted By:

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கோச் ரவி சாஸ்திரியாக இருக்கலாம். ஆனால் களத்தில் கலக்குவது யார் தெரியுமா.. சாட்சாத் டோணிதான்.

இந்திய அணி ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியிலும் டோணி நீக்கமற நிறைந்திருக்கிறார். என்னதான் சாஸ்திரி பிரிட்டிஷ் இங்கிலீஷில் டியூஷன் எடுத்தாலும் ஜார்க்கண்ட் இந்திதான் இந்திய அணிக்கு செமையாக ஒர்க் அவுட் ஆகிறது.

இந்தியா ஆடும் போட்டிகளை நன்றாக உற்றுப் பாருங்கள். டோணி பாகுபலி பிரபாஸ் போல வெற்றிக்கு வியூகம் வைப்பதை உணர்ந்து ரசிக்கலாம்.

பவுலிங் ஆலோசனை

பவுலிங் ஆலோசனை

எந்த பந்து வீச்சாளரை இப்போது யூஸ் பண்ணலாம். என்ன மாதிரியான பந்து வீச்சு எடுபடும் என்பதில் டோணி கில்லாடி. நேற்று நடந்த போட்டியிலும் கூட பும்ராவுக்கு அவர் கொடுத்த ஆலோசனைகள்தான் உதவியுள்ளன.

பீல்டிங்கில் கோஹ்லிக்கு ஆலோசனை

பீல்டிங்கில் கோஹ்லிக்கு ஆலோசனை

பீல்டிங்கிலும் கேப்டன் கோஹ்லிக்கு நிறைய டிப்ஸ் தருகிறார் டோணி. கிட்டத்தட்ட டோணி வியூகப்படியே கோஹ்லயும் பீல்டிங் செட் செய்கிறார். நேற்றைய போட்டியில் இதைப் பார்த்திருக்கலாம்.

 எதிரணியை துல்லியமாக கணிக்கும் டோணி

எதிரணியை துல்லியமாக கணிக்கும் டோணி

எதிரணியினர் செய்யும் தவறுகளை துல்லியமாக கவனித்து அதற்கேற்ப வியூகம் வகுப்பதில் டோணி கில்லாடி. விக்கெட் கீப்பராக இருப்பதால் டோணிக்கு வேலை இன்னும் ஈசியாக இருக்கிறது.

வழிகாட்டும் தெய்வம்

வழிகாட்டும் தெய்வம்

ஒரு கைடு போல மாறி விட்டார் டோணி. கோஹ்லி மட்டுமல்லாமல் மொத்த அணிக்குமே அவர் ஆலோசனை தருகிறார், அட்வைஸ் கொடுக்கிறார். பேட்டிங்கின்போது உடன் ஆடும் பேட்ஸ்மேன்களை தட்டிக் கொடுக்கிறார்.

அப்டீன்னா கோச் டோணிதானே

கிட்டத்தட்ட ஒரு பிளேயிங் கோச் போல மாறி விட்டார் டோணி. அவர் அணியைப் பொறுத்தவரை விக்கெட் கீப்பர்தான். ஆனால் அதையும் தாண்டி கேப்டனையும் தாண்டி ஒரு அட்டகாசமான கோச்சாக மாறி விட்டார் டோணி என்றுதான சொல்ல வேண்டும்.

Story first published: Monday, October 30, 2017, 10:57 [IST]
Other articles published on Oct 30, 2017
Please Wait while comments are loading...