சீட்டுக்கு துண்டு போட்டு பார்த்திருப்பீங்க ஆனால் டோணிக்கு?: வைரல் வீடியோ

Posted By:

டெல்லி: டோணியை ரசிகர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக அவரது மனைவி டோணியின் முகத்தில் துண்டை போட்டு மூடியிருக்கிறார். தற்போது இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

கிரிக்கெட் வீரர் டோணி தனது மனைவி சாக்ஷியுடன் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது சாக்ஷி டோணியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

எப்பவுமே ராஜா தான்

எப்பவுமே ராஜா தான்

இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளைவிட்டு டோணி ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு தற்போது கொஞ்சம் ஒய்வு கிடைத்து இருக்கிறது. இந்த இடைவெளியிலும் அவர் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன் டோணி டான்ஸ் ஆடும் வீடியோ வெளியானது. அதற்கு முன் அவர் மைதானத்திலும், ஏர்போர்ட்டிலும் படுத்து தூங்கும் போட்டோக்கள் வெளியாகின. களத்தில் மட்டும் இல்லாமல் வெளியிலும் வைரல் மன்னனாக வலம் வருகிறார் டோணி.

டோணியை கிண்டல் செய்யும் சாக்ஷி

தற்போது டோணி குறித்த புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் சாக்ஷி. அதில் டோணியை அப்படியே நிற்க வைத்து விட்டு அவர் முகத்தை திரும்புவதும், கொஞ்சுவதுமாக இருக்கிறார் சாக்ஷி. அதில் இருக்கும் டோணியின் குழந்தை தனமான முகம் தான் இப்போது வைரல் டிரெண்ட். கமெண்ட் பாக்சில் டோணியின் ரசிகைகள் அவரை கொஞ்சிய வண்ணம் இருக்கின்றனர்.

டோணியை எப்படி மறைக்கிறது

சாக்ஷி இன்னொரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். அதில் விமான இருக்கையில் அமர்ந்திருக்கும் டோணியின் முகத்தில் துண்டை போட்டு அவர் யார் என தெரியாமல் வைத்துள்ளார் சாக்ஷி. மேலும் அந்த போஸ்டில் ''ரசிகர்களிடம் இருந்து டோணியை இப்படித்தான் காப்பாற்ற வேண்டி இருக்கு'' என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்லாருமே பேமஸ் தான்

எல்லாருமே பேமஸ் தான்

தற்போது அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் ''டோணிக்கு மட்டும் முகத்தை மூடுனா எப்படி. உங்களுக்கும் முகத்தை மூடுங்க. முக்கியமா ஜிவா முகத்தையும் மூடிடுங்க. அவங்க டோணியைவிட ரொம்ப பேமஸ்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, November 15, 2017, 11:37 [IST]
Other articles published on Nov 15, 2017
Please Wait while comments are loading...