For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்

மும்பை : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை லக்னோவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் சில தவறுகள் காரணமாக தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

டி20 கிரிக்கெட் பொறுத்தவரை நடுவரிசை வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தி வெற்றி வாய்ப்பு இருக்கும்.

ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்! ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!

காரணம் என்ன?

காரணம் என்ன?

டி20 கிரிக்கெட்டில் கடைசி நான்கு ஓவர்களில் 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையை நடுவரிசை வீரர்கள் எட்ட வேண்டும். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் சூர்யகுமார் யாதவ் , ஆட்டத்தின் நெருக்கடியான கட்டத்தில் ஆட்டம் இழந்ததே காரணம். இந்திய அணி t20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் சூர்யகுமார் யாதவ் இன்னிங்ஸ் முழுவதும் விளையாட வேண்டும்.

தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்

அவர் எப்போதும் போல் அதிரடியாக ஆடலாம், அதில் தவறில்லை. அவர் அனைத்து பந்துவீச்சாளர்களையும் சிதறடிக்கிறார். இந்த நிலையில் எந்த வீரரை அடிக்க வேண்டும் எந்த வீரர் பந்து வீச்சை அடிக்கக் கூடாது என்பதை தெரிந்து கொண்டு இன்னிங்ஸ் முழுவதும் விளையாடினால் இந்திய அணிக்கு தான் வெற்றி கிடைக்கும். இதில் தோனி ஒரு மாஸ்டர். அவருக்கு நடு வரிசையில் எப்படி விளையாட வேண்டும் என்று நன்றாகவே தெரியும்.

ஸ்பெஷல் பயிற்சி

ஸ்பெஷல் பயிற்சி

வாஷிங்டன் சுந்தர் தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருவது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமான விஷயம். வாஷிங்டன் சுந்தர் பேட்ஸ்மேன் ஆகத்தான் தமிழ்நாடு கிரிக்கெட்டில் உள்ளே வந்தார். தொடக்க வீரராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் தற்போது நடுவரிசை சுழற் பந்துவீச்சாளர் என தன்னை மாற்றிக் கொண்டார். வாஷிங்டன் சுந்தர் டி20 கிரிக்கெட் காக சிக்ஸர்களை எப்படி அடிக்க வேண்டும் என்று தனி பயிற்சியை மேற்கொண்டார். நானும் அவரும் தான் ஒன்றிணைந்து இந்த பயிற்சியை செய்தோம்.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

தற்போது அந்தப் பயிற்சிக்கு ஏற்ற வகையில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடி வருகிறார். சுந்தருக்கு காயம் ஏற்படும் பிரச்சனை மட்டும் இருந்தது. அதில் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் வாஷிங்டன் சுந்தர் எதிர்காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்குவார். இந்தியஅணியின் டாப் வரிசை வீரர்களும் மற்றவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாத வகையில் விளையாட வேண்டும். நேற்று 15 நாட்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது பெரும் பின்னடைவாக ஏற்பட்டது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 28, 2023, 17:58 [IST]
Other articles published on Jan 28, 2023
English summary
Dinesh Karthik advice suryakumar to bat through out the innings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X