For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி புயலில் கரைந்து போனவர்…! கை கொடுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்..! இனி இவர் தான் கேப்டன்

Recommended Video

புல்லாங்குழல் வாசிக்கும் தல தோனி

சென்னை: தோனி என்ற புயலில் அடித்துச் செல்லப்பட்டு, இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டன் ஆக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பவர்களின் எண்ணிக்கை என்பது குறைவு. வெகு சிலரே அதில் சாதித்திருக்கின்றனர். இன்னமும் நாம் பேசிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக்.

அந்த பட்டியலில் அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாதவர் தினேஷ் கார்த்திக். இந்திய அணிக்காக இவர் கடைசியாக விளையாடியது உலக கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தான். கோலி, ரோகித் என டாப் ஆர்டர் கவிழ்ந்து போன நிலையில் உள்ளே நுழைந்தவர் தினேஷ் கார்த்திக்.

முடிவுக்கு வந்த கிரிக்கெட்

முடிவுக்கு வந்த கிரிக்கெட்

நம்பிக்கையுடன் ஆடிய அவர், துரதிருஷ்டவசமாக நீஷம் பிடித்த அசத்தல் கேட்சால் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்தது எனலாம். அதற்கு உதாரணம் தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சேர்க்கவில்லை. எனவே, அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பேச்சுகள் வெளியாகின.

அசத்தல் அறிவிப்பு

அசத்தல் அறிவிப்பு

ஆனால் அதையெல்லாம் போக்கும் வகையில், தமிழக கிரிக்கெட் வாரியம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாக்கி அழகு பார்த்திருக்கிறது. அவர் கேப்டனாக்கப்பட்டதற்கு சில சுவாரசிய தகவல்களும் இருக்கின்றன.

விஜய் ஹசாரே தொடர்

விஜய் ஹசாரே தொடர்

தினேஷ் கார்த்திக் 2017ம் ஆண்டு நடந்த விஜய் ஹசாரே டிராபியில் அதிக ரன்களை குவித்து தமிழக அணிக்கு கோப்பையை கைப்பற்றி தந்தார். அது மட்டுமின்றி தியோடர் டிராபியிலும் தமிழக அணியை சாம்பியனாக்கினார். அதுவே அவருக்கு 2017 சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பளிக்க காரணமாக இருந்தது.

தினேஷ் கார்த்திக் கேப்டன்

தினேஷ் கார்த்திக் கேப்டன்

உலக கோப்பைக்கு பிறகு, தற்போது அவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. அதனால் தமிழக கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு நடைபெற விருக்கும் விஜய் ஹசாரே தொடரில் இவரை தமிழக அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளது.

தேர்வுக்குழு நம்பிக்கை

தேர்வுக்குழு நம்பிக்கை

இது குறித்து தமிழக தேர்வுக்குழு கூறியிருப்பதாவது: தமிழக அணியில் சிறந்த கேப்டன், அனுபமிக்க வீரர் தினேஷ் கார்த்திக். அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வருவதால், இது அவருக்கு சுலபமாக இருக்கும். இந்த முறை அவர் தலைமையில் தமிழக அணி கோப்பையை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மீண்டு வர வேண்டும்

மீண்டு வர வேண்டும்

விஜய் ஹசாரே தொடர் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கப்படுகிறது. முதல் போட்டியானது ஜெய்பூரில் துவங்கவுள்ளது. அதில் கலந்து கொள்ளவிருக்கும் மற்ற வீரர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. இந்த தொடரில் வழக்கம் போல இவர் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இவர் மீண்டும் நுழைய வேண்டும். அதுவே தமிழக கிரிக்கெட் நிர்வாகத்தின் விருப்பம். அதற்காக தான் இந்த தேர்வு என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, August 27, 2019, 18:51 [IST]
Other articles published on Aug 27, 2019
English summary
Dinesh karthik announced as tamilnadu team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X