For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப தப்பாச்சே.. தினேஷ் கார்த்திக்குக்கு அங்க என்ன வேலை? பிசிசிஐ அனுமதி இருக்கா? வெடித்த சர்ச்சை!

Recommended Video

Watch Video : Dinesh Karthik spotted in CPL T20 league which spurs controversy

குயின்ஸ் பார்க் : கரீபியன் பிரீமியர் லீக் என்ற வெஸ்ட் இண்டீஸ் உள்ளூர் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் ஒரு அணியின் உடை மாற்றும் அறையில் இருந்தது சர்ச்சை ஆகி உள்ளது.

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் எனப்படும் அணியின் உடை மாற்றும் அறையில் அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லம் உடன் தினேஷ் கார்த்திக் ஆலோசனை செய்து கொண்டு இருக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின.

கண்ணில் கூலிங் கிளாஸ்.. கையில் சரக்கு கிளாஸ்..!! உற்சாகத்தில் மிதந்த பிரபல கிரிக்கெட் கோச்..!கண்ணில் கூலிங் கிளாஸ்.. கையில் சரக்கு கிளாஸ்..!! உற்சாகத்தில் மிதந்த பிரபல கிரிக்கெட் கோச்..!

சந்தேகம் எழுந்தது

சந்தேகம் எழுந்தது

இவருக்கு அங்கே என்ன வேலை? இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆடக் கூடாது என பிசிசிஐ விதி இருக்கும் நிலையில், இவர் அங்கே என்ன செய்கிறார் என்ற சந்தேகம் எழுந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன்

தினேஷ் கார்த்திக் ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ஐந்தாம் இடம் மட்டுமே பிடித்தது. தினேஷ் கார்த்திக் கேப்டன்சி குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

ஒரே உரிமையாளர்

ஒரே உரிமையாளர்

அவர் கரீபியன் பிரீமியர் லீக்கில் டரின்பாகி நைட் ரைடர்ஸ் என்ற அணியின் உடை மாற்றும் அறையில் இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள் தான், அந்த அணிக்கும் உரிமையாளர்கள்.

புதிய பயிற்சியாளர்

புதிய பயிற்சியாளர்

அதே போல, இரண்டு அணிக்கும் ஒரே பயிற்சியாளராக பிரெண்டன் மெக்குல்லம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருடன் தான் தினேஷ் கார்த்திக் ஆலோசனை செய்து கொண்டு இருந்தார். இதுவரை எந்த சிக்கலும் இல்லை.

கரீபியன் பிரீமியர் லீக்கில் தினேஷ்

கரீபியன் பிரீமியர் லீக்கில் தினேஷ்

ஆனால், இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாட தடை எனும் நிலையில், தினேஷ் கார்த்திக் அங்கே என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. அவர் வீரராக பங்கேற்கவில்லை என்றாலும் அந்த அணியின் உடையை அணிந்து கொண்டு தான் இருந்தார்.

பிசிசிஐ அனுமதி

பிசிசிஐ அனுமதி

அந்த டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடவில்லை என்றாலும், அங்கே அந்த அணியுடன் அவர் இருக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. யுவராஜ் சிங் மட்டுமே வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்க அனுமதி பெற்ற ஒரே இந்திய வீரர் ஆவார். தினேஷ் கார்த்திக் நிலை குறித்து பிசிசிஐ எந்த தகவலும் அளிக்கவில்லை.

சிக்கல் இல்லை

சிக்கல் இல்லை

அதே சமயம், அனுமதி பெறாவிட்டாலும் தினேஷ் கார்த்திக்குக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். காரணம், வீரராக போட்டிகளில் பங்கேற்க தான் தடை. எந்த பதவியிலும் இல்லாமல் அந்த அணியுடன் அவர் இருப்பதை பிசிசிஐ மறுக்க முடியாது என்கிறார்கள்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

எதற்காக தினேஷ் கார்த்திக் அங்கே சென்றார் என்பது பற்றியும் விவாதம் எழுந்துள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் நீக்கப்படுவார் என சிலர் கூறி வந்த நிலையில், புதிய பயிற்சியாளர் மெக்குல்லம் உடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

பயிற்சியாளருடன் புரிதல்

பயிற்சியாளருடன் புரிதல்

அதனால், அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவரே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தொடர்வார் என கூறப்படுகிறது. அதை ஒட்டியே புதிய பயிற்சியாளருடன் தன் புரிதலை வளர்த்துக் கொள்ள அவர் கரீபியன் பிரீமியர் லீக்கிற்கு சென்றார் என சிலர் கூறுகிறார்கள்.

Story first published: Friday, September 6, 2019, 12:46 [IST]
Other articles published on Sep 6, 2019
English summary
Dinesh Karthik spotted in CPL T20 league which spurs controversy. People asks did he got BCCI NOC?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X