For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஓவரில் 19 ரன்கள்.. கடைசி போட்டியில் பிஞ்ச்க்கு சோகம்.. கடைசியில் ஸ்மித் கொடுத்த டிவிஸ்ட்

குயின்ஸ்லாந்து: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது கடைசி போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்க்கு சோகமே மிஞ்சியது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

முதல் 2 போட்டியிலும் நியூசிலாந்து தோல்வியை தழுவிய நிலையில் ஆறுதல் வெற்றிக்காக அந்த அணி போராடியது.

 வீரர்களை களத்தில் அவமானப்படுத்திய ரோகித் சர்மா.. கேப்டனே இப்படி செய்யலாமா..? கோலி ரசிகர்கள் கேள்வி வீரர்களை களத்தில் அவமானப்படுத்திய ரோகித் சர்மா.. கேப்டனே இப்படி செய்யலாமா..? கோலி ரசிகர்கள் கேள்வி

பிஞ்ச் கடைசி போட்டி

பிஞ்ச் கடைசி போட்டி

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்சை பொறுத்தவரை, அவர் கடைசியாக விளையாடிய 13 இன்னிங்சில் 5 முறை டக் அவுட் ஆனார். இதனையடுத்து, ஆரோன் பிஞ்ச், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆரோன் பிஞ்ச், ஜாஸ் இங்லிஸ் களத்துக்கு வந்தனர்.

தடுமாறிய ஆஸ்திரேலியா

தடுமாறிய ஆஸ்திரேலியா

ஜாஸ் இங்லிஸ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஆட்டத்தில் களமிறங்கிய கேப்டன் பிஞ்ச் 5 ரன்களில் வெளியேறினார். நியூசிலாந்து வீரர் பவுல்ட் தன்னுடைய முதல் ஸ்பெல்லில் 6 ஓவர் வீசி 3 மைடண்களுடன் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் 19 ரன்களை மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது.

ஸ்மித் சதம்

ஸ்மித் சதம்

இதனையடுத்து, ஸ்மித் களத்துக்கு வந்த பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். 127 பந்துகளில் தன்னுடைய 12 வது சதத்தை ஸ்மித் பூர்த்தி செய்தார். லாபஸ்சேங் 52 ரன்களும், அலக்ஸ் கேரி 42 ரன்களும் எடுக்க, ஆஸ்திரேலிய அணி கடைசி 20 ஓவரில் 161 ரன்களை சேர்க்க,ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 267 ரன்கள் எடுத்தது. 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது.

தொடரும் தோல்வி

தொடரும் தோல்வி

ஃபின் ஆலன் 35 ரன்களும், கான்வே 21 ரன்களும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 27 ரன்களும் , டாம் லாத்தம் 10 ரன்களும், மிட்செல் 16 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். 112 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து நியூசிலாந்து தடுமாற, கிளன் பிலிப்ஸ் 47 ரன்களும், ஜேம்ஸ் நிஷம் 36 ரன்களும், சாண்டர் 30 ரன்களும் சேர்க்க, நியூசிலாந்து அணி வெற்றி அருகே வர, முக்கிய கட்டத்தில் கொத்தாக அந்த அணி விக்கெட்டை இழக்க, நியூசிலாந்து அணி 242 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், கடந்த 11 ஆண்டுகளாக நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தவில்லை.

Story first published: Sunday, September 11, 2022, 20:55 [IST]
Other articles published on Sep 11, 2022
English summary
Disappointment for Aaron finch in his farewell game but Australia win10 ஓவரில் 19 ரன்கள்.. கடைசி போட்டியில் பிஞ்ச்க்கு சோகம்.. கடைசியில் ஸ்மித் கொடுத்த டிவிஸ்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X